Tuesday 14 July 2015

உலகின் மிக நீண்ட உண்மையான சஸ்பென்ஸ் எது?



உலகில் எத்தனையோ ஸஸ்பென்ஸ் பற்றிக் கதை, கட்டுரை, புதினங்களில், திரைப் படங்களில் பார்த்துப் படித்துக், கண்டு, ரசித்து கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அவை எல்லாமே ஒரு வகையில் பெரும்பாலான நேரங்களில் கற்பனையாய் இருக்க தான் நேரிடுகின்றன. அல்லது கடந்த கால  உதாரணங்களாகி விடுகின்றன. அத்தகைய் கடந்த கால உதாரணத்திற்கு உதாரணமாய் ஐரோப்பிய  வரலாற்றிலிருந்து ஒரு உதாரணம் கூடக் காட்டலாம் தான். ஆனால் அது முற்ற முழுக்கப் பொருத்தமான ஒரு உதாரணமாய் விளங்கக் கூடுமா? எனச் சற்று சீர் தூக்கிச் சிந்தித்துப் பார்த்தால் அதுவும் கூட ஒரு வகையில் பொருந்துமென்றாலும் இன்னொரு வகையில் முழுதும், முற்ற முழுக்கப் பொருந்தாது. ஏனெனில் நான் இங்கு உபயோகித்திருக்கும் வார்த்தை, பதம், சொற்பிரயோகம் அப்படிப்பட்டது.  ஸஸ்பென்ஸ்.

அந்த வார்த்தைக்குரிய முழு முதற் பொருளில் பார்த்தால் ஒன்றைப் பற்றித் தெரிந்து கொள்ள, அதுவும் தன்னோடு, தனது வாழ்க்கையோடு, தனது முயற்சி, உழைப்போடு சம்பந்தப் பட்ட ஒன்றின் மீது ஒரு மனிதன் காட்டும் அதீத ஆர்வ அக்கறை என்று கூட இதை பொருள் கொள்ளலாம். அந்த வகையில் தனது மாபெரும் அறிவியல் கண்டு பிடிப்பான நவீன மரபியல் விதிகளைப் பற்றிய தனது கண்டு பிடிப்பின் மீது அறிவியல் உலகம் எந்த அளவுக்கு ஒரு ஆர்வம் காட்டுகிறது, எந்த அளவுக்கு அதற்கு அறிவியல் உலகம் ஒரு அங்கீகார அடையாளம் தர எண்ணுகிறது? என்பதையெல்லாம் அறிந்து கொள்ள கிறிகிரி மெண்டல் அவர்கள் தமது மொத்த வாழ்நாளெல்லாம் (உண்மையில், நிஜத்தில் அவர் அப்படி அதற்காகவெல்லாம் அடக்க இயலாத ஒரு அதீத  ஆர்வத்தோடு வாழ்நாள் முழுக்கவும் காத்திருந்து, எதிர் பர்ர்த்து ஏங்கிச் சாக வில்லை என்பது தான் நிஜத்திலும் நிஜம். காலம் முழுவதும் ஒரு கர்ம யோகியைப் போல் என் கடன் பணி செய்து கிடப்பதே! கடமையைச் செய், பலனை எதிர் பாராதே ரக மனிதராய் தான் பணியாற்றி மடிந்துள்ளார்.) காத்திருந்தாலும் கூட அறிந்து கொள்ள முடியாது,

காரணம் அதற்கேற்ற சூழல் அப்போதும் கூட அன்றைய கால ஐரோப்பிய திருச்சபைகளிலும் கூட நிலவவேயில்லை என்பது தான் உண்மை. ஆதலால் தனது கண்டுபிடிப்புகளின் வெற்றித் தன்மையைத் தான் வாழும் தனது சொந்த வாழ்க்கைக் காலத்திலேயே, தனது சொந்தக் கண்களாலேயே காண முடியாமலேயே, அந்தப் பாக்கியம் பெற முடியாமலேயே தான் இறந்தார் நவீன மரபியலின் தந்தை எனப்படும் கிரிகிரி மெண்டல். பிற்காலத்தில் அவர் இறந்த பின் தான் ஏற்று, அங்கீகரித்துப் புகழப்பட்டார். இறந்த பின் ஏற்று, அங்கீகரித்துப் புகழப்பட்டால் என்ன? அல்லது இகழப்பட்டால் தான் என்ன? மாண்டவர் மீண்டெழுந்து வந்து விழித்து, விழித்துப் பார்க்கவா போகிறார்? எந்தப் புகழும், பரிசும், விருதுகளும் வாழும் காலத்திற்குள் உரிய மனிதரைப் போய்ச் சேர வேண்டும், இருக்கும் போது விட்டு விட்டு இறந்த பின் வந்தால் என்ன? போனால் என்ன?


உண்மையிலேயே உங்களில் எவரேனும் ஒரு நிஜ ஸஸ்பென்ஸ் பற்றி அதாவது உலகின் மிக நீண்ட உண்மையான ஸஸ்பென்ஸ் பற்றிக் கண்டுக் கேட்டு, உணர்ந்து, உறுதிப் படுத்தி கொண்டதுண்டா? ஆம் என்பவர்கள் தங்களது அத்தகைய அனுபவங்களை இந்தத் தமிழ் கூறும் இணைய நல்லுலகின் முன் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லை என்பவர்கள் இந்த வலைப் பூவைப் பின் தொடருங்கள். ஏன் அப்படி கிரி கிரி மெண்டலின் உதாரணத்தை இங்கு வலிந்து ஏன், எதற்குக் கூற வருகிறேன் என்பது உங்களில் அனேகருக்கு இல்லாவிட்டாலும் சிலப் பலருக்கு இந்நேரம் ஸ்பஷ்டமாகப் புரிய நேர்ந்திருக்கும், 

ஆம் வாசகர்களே கிரி. கிரி மெண்டலுக்கு அப்படிபட்ட ஒரு ஆர்வம் உண்மையாகவே இருந்ததோ இல்லையோ அது பற்றி நாம் ஏதும் உறுதியாகச் சொல்ல முடியாது. யாரோ எழுதிச் சென்றச சிலக் குறிப்புகள் வாயிலாகத் தான் அந்த அது போன்றச் செய்திகளை எல்லாம் அறிந்து கொள்ள நேருகிறோம். எந்த ஒரு விஞ்ஞானிக்கும் தனது கண்டுபிடிப்புகளுக்கு கிடைக்கக் காத்திருக்கிற அறிவியல் உலகின் அங்கீகாரம் குறித்து முற்றிலும் பொறுப்பற்ற, அக்கறையற்ற, ஒரு தன்மை இருந்து விட முடியாது தான். அந்த வகையில் நாம் மெண்டலையும் அப்படிபட்ட ஒரு பொறுப்பற்ற, தமது கண்டுபிடிப்புகளின் மீது எந்த ஒரு ஆர்வ அக்கறையும் காட்டியிராத விஞ்ஞானியாய் போகிற போக்கில், பொத்தாம் போக்கில் சொல்லி விட்டுப் போய்விட முடியாது, அதற்கான முறையான முயற்சிகளிலும் அவரும் இறங்காமல் இல்லை. ஆனால் அவரது துரதிருஷ்டம் அவருக்கு மேலிருந்த அதிகாரப் பீடமே அன்றைய அவரது அங்கீகாரத்திற்கு பெரும் தடையாய் இருந்தது. 

ஆதலால் மெண்டலும் தமது இறுதிக் காலம் வரை யாராலும் அறியப்படாதவராகவே வாழ்ந்து முடிந்து விட்டார். அது அவர் தவறல்ல. அன்றைய காலத்தின் கட்டாயம் அப்படி. மேதைகளுக்கும் புத்திசாலிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக ஒரே ஒரு மெல்லிய வித்தியாசம் ஒன்றைத் தான் குறிப்பிடுவார்கள் முன்பெல்லாம் அடிக்கடி எல்லா இடங்களிலும். அதாவது புத்திசாலிகள் என்பவர்கள் தங்களது வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள், ஆனால் மேதைகளோ தங்களுக்கான தங்களுடைய வாய்ப்புகளுக்காக ஏங்கிக் காத்திருக்காமால் தங்களுக்கான வாய்ப்புகளைத் தாங்களே அரும்பாடுபட்டு உருவாக்கிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். என்பார்கள். 

ஆனால் இன்றைய போட்டி யுகத்திலோ புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்லவோ, அல்லது அது எங்கே எப்படி மறை பொருளாய் மறைந்து ஒளிந்து கொண்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்கத் தெரியாத திறனற்றவர்களாயும் அல்லது தனக்கான ஒரு புதிய, முற்றிலும் புதிய, பிரத்யோகமான, வாய்ப்புகளை, மற்றவர்கள் அவ்வளவு எளிதில் காப்பி அடித்து விடாத படிக்கோ, அல்லது திருடிவிடாத படிக்கு முற்றிலும் காப்புரிமை பெற்றதைப் போன்ற ஒரு வாய்ப்புகளின் தொகுதியை உருவாக்கிக் கொள்ளவோ திறனற்றவர்களாய் இருப்பதால் கூடு மானவரை மற்றவர்களின் வாய்ப்புகளைத் திருடுவதற்குக் கூசாமல் முயற்சிக்கிறார்கள். 

அப்படித் திருடுவதற்கும், தட்டிப் பறிப்பதற்கும் உள்ளத் திறனையே கூட ஒரு மேதைமைத் தனம் தான் எனக் கூசாமல், நாக் கூசாமல் பிரகடனப்படுத்தவும் செய்கிறார்கள். இன்றைய போட்டி உலகில் முட்டாள்கள் கூடக் காத்திருப்பதில்லை. காத்திருப்பவனுக்கு இன்று எதுவும் மிஞ்சாது என்பது தான் இன்றைய நிதர்சனம். ஆனால் இன்றும் எதற்குக் காத்திருக்க வேண்டும், எப்போது வரை ஒடுங்கிக் காத்திருக்க வேண்டும் என்றக் காத்திருத்தலின் சூட்சுமம் தெரிந்த ஒரு சாஸ்திரியக் காத்திருத்தலுக்கு இன்றும் என்றும் மு(எ)க்காலத்திலும் சற்று மதிப்பு இருக்கவே செய்கிறது. .

 இந்தப் பதிவுகளில் நான் உங்களுடன் விவாதிக்க விரும்புவதும் அத்தகைய ஒரு காத்திருப்பு பற்றித் தான். என்னுடைய 18 ஆண்டு காலக் காத்திருப்பு ஒன்றும் (ஏன் ஒரு அர்த்தத்தில் இந்த முழு ஜென்மமே என்று கூடச் சொல்வேன்)  அப்படிபட்ட ஒன்று தானா? அல்லது நாட்டுப்புறத்தில் மிகவும் சௌஜன்யமாக (அதாவது சர்வ சாதாரணமாக, கொச்சையாக) ஒரு சொலவடை ஒன்று சொல்வார்களே அப்படியா?. "வெட்டி ........ நித்திரைக்குக் கேடு" 'குடலேற்றம் தெரியாமல் கோடி ரூபாய் செலவு செய்தானாம்" என இந்த ரீதியில் இன்னும் ஏதோதோ கூறிக் கொண்டு செல்லலாம். அல்லது " நீ எத்தனைப் புயல்களைச் சமாளித்தாய் என்பது பற்றி உலகத்துக்கு அக்கறை கிடையாது. கப்பலை பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தாயா என்பது தான் கேள்வி." அப்படி நான் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் இந்த எனது லட்சியக் கப்பலும் இத்தனைக் காலமும் தனக்கான தனது இலக்கை நோக்கித் தான், சரியாகத் தான் சென்று கொண்டுள்ளதா?

இலக்கு சரியாக இருந்தாலும் அதை அடைவதற்கான எனது செயல் முறைகள் சரியானது தானா? உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமலே ஒரு (புது) உலகச் சாகசப் பயணத்தைத் தொடர்ந்த கொலம்பசைப் போலத் தான், வரை படத்தை மட்டுமே நம்பிய மாலுமிகளுக்கிடையில் உள்ளுணர்வையும் உறுதுணைக்கழைத்தக் கொலம்பசைப் போல, (வெறும் வரைபடத்தை மட்டுமே வைத்துக் கொண்டுக் கொள்ளையடித்துக் குபேரனாக முடியாது என முடிவெடுத்த ஹாலிவுட் திரைப்படக் கதாப்பாத்திரம் (பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் ஸீ-2 பட ஜேக் ஸ்பெரோ) ஒன்றைப் போலத் தான் எனது 18 ஆண்டு காலத் தேடல் ஒன்றும் வாழக்கைக் கடலில் இதுவரை தரை தட்டாமல் செலுத்தி வந்தாயிற்று. இனிமேலும் இதை இப்படியே செலுத்தி 

1) முதலில் இலக்கை எட்ட இயலுமா இடையூறின்றி?! 2), இலக்கை எட்டினாலும் இறவாது ஊர் திரும்ப முடியுமா? என்பது போன்ற கேள்விப் புயல்கள் ஆட்டி அலைக்கழிக்கவே தான் இப்போது இதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் கூறும் இணைய நல்லுலகைச் சேர்ந்த ஒட்டுமொத்தத் தமிழ் இணையவாசிகளின் கவன ஈர்ப்புக்குக் கொண்டு வந்துள்ளேன். 

          கொலம்பசுக்கும், (திரைப்படக் கதாபாத்திரமாக இருந்தாலும்) ஜாக் ஸ்பெரோவுக்கும் கூட ஒரு டீம் இருந்தது. ஆனால் இதுவரை எனது இந்தப் பயணத் திட்டத்துக்கு என்று ஏதும் ஒரு கிறுக்கு மாலுமிப் பட்டாளமும் கூடக் கிடையாது தான், இருந்த போதிலும் ஸ்பானிய, போர்ச்சுகீசிய அரச வட்டாரங்களில் தனது பயணத் திட்டத்துக்கு ஒரு அறவழிப்பட்ட ஆதரவும், பொருள் வழிபட்ட ஆதரவும் ஒருங்கேத் தேடியக் கொலம்பசைப் போலவே அரசு, அரசியல் வழிபட்ட உதவிகளையும் கோராமல், தேடாமல் இல்லை, ஒரு புறம் அது போன்ற அயர்ச்சி தரும் முயற்சிகளுக்கும் பஞ்ச்மில்லை. அது பாட்டுக்கு அது, இதோ இது பாட்டுக்கு இது,

    மெண்டலும் ஐரோப்பிய உதாரணம் தான். கொலம்பசும் ஐரோப்பிய உதாரணம் தான். இவ்விரு உதாரணங்களிலும் இருக்கும் மெலிதான ஒரு மென்(வன்) வித்தியாசத்தை தமிழ் இணையவாசிகளான நீங்கள் தானாகவே புரிந்து கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

   ஆனால் என்னால் அப்படியிருக்க முடியாது என்வரை என்னைப் பொறுத்த வரை, ஒரு விசித்திர செய்தியைப் பற்றிக் கண்டுபிடிக்கவோ, தெரிந்து கொள்ளவோ நேர்ந்தால் கூட, அதை உறுதி செய்து கொள்ளும் வரை அந்த உறுதிப் படுத்திக் கொள்வது என்பதும் நமது சக்தி வரம்புகளுக்குள்ளும் எட்டக் கூடிய ஒன்றாய் இருந்து விட்டால், உறுதிப்படுதிக் கொள்ளும் வரை எனக்கு உறக்கம் பிடிக்காது என்பது தான் உண்மை.  சரி நீங்கள் அடைகாக்கக் கூடிய அந்த சஸ்பென்ஸ் அப்படி என்ன தான் சஸ்பென்ஸ் என்கிறீர்களா?   

No comments:

Post a Comment