Sunday 19 July 2015

மு(எ)ன்னுரை "இந்த மில்லினியத்தின் மிகப் பெரியக் குற்றம்."




                                     உள்ளே……                                                                                     பக்கம்                                                      

                                                                                                                
1)   ஜு.வி.யின் கற்றது கடலளவு தொடர் ஆசிரியர் து.கணேசன் அவர்களுக்கு
   எழுதிய கடிதத்தின் நகல்................................ ……………… ......................................................   1-5
2)   கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம் (27.04.2005 தேதியிட்டது) ……………….............   7-43
3)   இறந்தவன் கண்கள் அவன் பிறந்த தேதியைச் சொல்கின்றன(க.க.பெ.செ ..….…      44
4)   இது நடக்கக் கூடியதா, நடை முறைச் சாத்தியம் கொண்டது தானா?.. …………….20-22
5)   கலைக்கதிர்ப் பெட்டிச் செய்திகள் (2) news about constant gene……………………….    23
6)   ஊயிரூட்டக்கூடியவை அல்லது சமாதி கட்டுபவை……………………… …………………….   24-30
7)   டோபமைன் துறவிகள், சிற்றின்பவாதியா? பேரின்பவாதியா?.. …….............................31-33
8)   140 வருட சந்தேகத்தைத் தெளிவு படுத்திய தடய அறிவியல்                            
   பரிசோதனைமுறை................................................................................................................
9)    நெப்போலியன் வீழ்ச்சியும் பங்குச்சந்தையில் அதன் எதிரொலியும்..........
10)   13.08.2000 தேதியிட்ட வார மலர்-அனுராதா ரமணனின் அன்புடன்
    அந்தரங்கம்தொடர் மீதான விமர்சனம்…………………………………………………..........................      55
11)          உணர்ச்சி என்பதும் ஒரு வகையில் ஆற்றல் பிழம்பே………………………………..     56
                      (ஒரு அர்த்தத்தில் இது சுவாமி விவேகானந்தா; விட்டுச் சென்ற ஒரு
                 பணியின் தொடர்ச்சி போலத் தான்)     
12)             திட்டத்தின் மூல நகலும் அதன் பிறப்பிடமும்(மாத்ருபூதம்)………………………..
13)             திட்டத்தின் ஆஸ்திக, நாஸ்திக இரட்டை முகம். (அர்த்தநாரிக் கடிதம்)
14)                ஏன் மறுத்தது கின்னஸ்?................................................ .................................................
15)                இலண்டன் பி.பி.சி.தமிழோசை ஆனந்தி சூர்யப்பிரகாசம், மற்றும்
         மகாதேவன் இவர்களுக்கு எழுதிய கடித நகல் (………தேதியிட்டது.)...........
16)   இந்தக் கின்னஸ் ப்ரொப்போசலின் பழைய (ஆங்கில, தமிழ் ) வடிவம் மற்றும்
    இது குறித்த இன் கம்மிங் லெட்டர்ஸ் .............................................................
    அ). இப் ப்ரொப்போசல் குறித்த நெதர்லாந்த் சைக்காலஜிஸ்டு
        ஒருவரின் முதல் கடிதம்..............................................................................................60-62
    ஆ). இது விஸயம் குறித்த கின்னஸின் முதல் பதில் கடிதம். (03.06.1998)……..      63
    இ). இது விஸயம் குறித்த கின்னஸின் இரண்டாவது பதில் கடிதம்.              
                  (18.08.1998 தேதியிட்டது.)…………………………………………………………………………………………………….      64
    ஈ). 14.05.2003 தேதியிட்ட கின்னஸின் தெட்டத் தெளிவான 3-வது இறுதி
        மறுதலிப்புக் கடிதம்………………………………………………………………………………………………………………    65
        உ). பி;பி;சி வோhல்டு-ன் கடிதம்……………………………………………………………………………………    66                                                        
   ஊ). விகடனின் கடிதங்கள்…..…………………………………………………………………………………………………….    67
17)            நிலுவையில் உள்ள மற்ற ஸ்கேனிங் உள்ளடக்கங்கள். .......................
    அ). கேஸ்ட்டேரஸன் குறித்த ஒளிப்படம்…………………………………...
    ஆ). டெஸ்டிஸ் அனடாமி விளக்கப்படம்…………………………………...
    இ). அன்புடன் அந்தரங்கம்(………தேதியிட்ட வார மலர்)………………....
     ஈ).  ஏன் வேண்டாம் இன்பத் திராவிடம்?. சு.செந்தில் குமரனின் தேவி…….
            தொடரிலிருந்து.                      ……………………….
18)            ஆர்ட்டிஃபிஸியல் இன்செமினேஸன் வீடியோ ஒளிப்படம் ()……………………
19)             சுவாமி மலைப் பதிப்பகத்தின் கேட்ஸ் பற்றிய பகுதிகள்…………………  



                 இதைப் படிக்கும் எவர் ஒருவருக்குமான சில அறிமுக வார்த்தைகள்…


தலைப்புக்கும் இங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருப்பவைகளுக்கும் சம்பந்தமேயில்லையே தாம் முழுவதும் ஏமாற்றப்பட்டு விட்டோமோ எனச் சந்தேகிக்கும் வாசகர்கள், முழுவதையும் அத்தியாயம் வாரியாகப் படிக்கப் பொறுமையில்லாத வாசகர்கள் நேரடியாக அத்தியாயம் எண்12, 13,                           பக்-    க்கே சென்றுவிடலாம். தலைப்பு சம்பந்தமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களை வீணில் இங்கு காத்திருக்க வைப்பதில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஒரு கவன ஈர்ப்புக்கான உத்தியாகவே தலைப்பு அவ்விதம் இடப்பட்டதே அன்றி இந்தப் புத்தகம், புத்தக விஷயம் பெருமளவு, (ஏன் முழுக்க, முழுக்க) மனித குலத்தின் சமூகக் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கவியல் சம்பந்தப்பட்ட கருத்துருக்களை அறிவியல் வெளிச்சத்திற்குட்படுத்தி ஆய்வு செய்யும்; நோக்கம் கொண்டது.

குறிப்பாக இந்து மத ஆன்மீகத்தோடும் அதன் தார்மீக அறநெறி அளவு கோல்களோடும் சம்பந்தப்பட்டது. பகுதியளவு லௌகீகத்தோடும் லௌகீகத்தோடு தொடர்புடைய அரசியலோடும் தொடர்புடையது. தீர்வோ முற்றமுழுக்க அறிவியல் உலகத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னும் பகுதியளவு தனது விஷயாதாரங்களைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை செயற்படுத்தவும் தனி ஒரு மனிதனாகக் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு பெரும் கடித யுத்தம் நிகழ்த்தித் தேய்ந்து ஓய்ந்து போன மனிதன் சம்பந்தப்பட்டது. ஆக இதற்கு அறிவியல், அரசியல், சமூகவியல், ஆன்மீகம் என ஒரு பன்முகப் பரிமாணம் உண்டு.

முழு ஏடறியா வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வருகிற, யாருக்கும் தெரியாத, மிகவும் புராதான காலத்திலிருந்தே மனித குலத்தைத் தொடருகின்ற ஒரு விஷயம் குறித்து வெறும் வார்த்தை அளப்புகளுக்குப் பதிலாக முதன் முதலாக ஒரு நிரூபணம் தேடும், (சத்தியம் தேடும்) ஒரு சத்தியமான அசாத்திய சத்திய முயற்சி இது. கற்பு, பிரம்மச்சாரியம், நைஷ்டிகப்பிரம்மச்சரியம் என்ற மனித குலத்தின் ஒழுக்கத்தின் படிநிலைகளைப் புதிய அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு அளவீட்டு முறையால் அளக்க முடியுமா? என்ற தேடல் பற்றிய முயற்சி. ஆக என்னடா இது அனுமார் வால் இராமாயணம் போல் படிக்கப் படிக்க இது நீண்டு நீண்டு நீண்டு…. கொண்டே போகிறதே என சோர்வடைகிற மனிதர்கள், வாசகர்கள் நேரே பக்கம்-    , க்கே சென்று விடுங்கள்.


     மற்றபடி கீழே உள்ளவை அனைத்தும் சில தனிமனிதர்களுக்கோ அல்லது சில தனி நிறுவனங்கள், அமைப்பு, இயக்கங்களுக்கோ, அல்லது புகழ் பெற்ற உள்ளுர், அயல்தேச முக்கிய பிரமுகர்களுக்கோ, பத்திரிக்கைகளுக்கோ எழுதப்பட்ட கடிதச் சுருக்கங்களின் விரிவான சாராம்சங்களே. அந்த வகையில் திட்டமான ஒரு தலைப்புடன் ஒரு புத்தகமாக வெளியிடப்பட வேண்டிய சாராம்சங்களை அன்புடன்……..க்கு என ஒரு கடித நடையில் தொடங்குவதால் இது யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதம் போலஎன தயவு செய்து ழூழூழூழூவிட்டோத்தியாக மட்டும் இதை விட்டகன்று விடாதீர்கள். தான் ஒரு அநீதியான, மோசமான சமுதாயத்தில், உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதிலிருந்து தப்பிப்பது எப்படி? எனத் தேடலோடு இருக்கின்ற ஒவ்வொருவருக்குமானக் கடிதம். அந்த வகையில் இது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உலகக் குடிமகனுக்குமான கடிதமும் கூட.

தான் ஒரு அநீதியான, மோசமான சமுதாயத்தில், உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் கெட்டிப்பட்டுவர்களுக்கு மட்டுமல்ல, மோசமான ஒரு சமுதாயத்தில், உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகத்தின் ஒரு துளி, ஒரே ஒரு துளி இப்போது தான் சற்று எட்டிப் பார்த்து துளிர்த்திருந்தாலும் சரி அத்தகைய சந்தேக எண்ணம் துளித்தவர்களுக்கும் சேர்த்தே இந்தக் கடிதங்கள்.

    எளியவர்களைக் காப்பாற்றுவதில் வலியவர்களைக் கண்டு அஞ்சி விடாத, செல்வத்தை இலஞ்சமாகப் பெற்று விலை போய்விடாத ஒரு நியாயவானை, தர்மவானை, அப்படிப்பட்ட  ஒரு புண்ணியவானை மனிதர்களில் அல்லாது இந்து, கிறித்துவ, இஸ்லாமிய, புத்த, யூத மதங்களின் சிறு பெருந் தெய்வங்களில் அல்லது அம்மதங்களின் இறைத்தூதர்களில் தேடிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்குமான, அனைவருக்குமான கடிதமும் கூட இது. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு இந்தக் கிரகத்தில் எங்கு தான் பஞ்சம் என்கிறீர்களா? ஆம். ஓத்துக் கொள்கிறேன் இத்தகைய மனிதர்களுக்கு இந்தக் கிரகமெங்கும் எங்கும் பஞ்சமென்பதே கிடையாது தான். அதையும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும்.

     அதனால் தான் கூறுகிறேன், இது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இது தமிழா;களோடு மட்டுமே சம்பந்தபட்ட ஒரு விஷயம் போல இது என்றும் தயவு செய்து நினைத்துவிடாதீர்கள். ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் இது இந்தக் கிரகத்தின் அத்தனை மொழிகளுக்குமான ஒரு கடிதம் இது. ஆக ஒரு வகையில் இது உங்களின் கதையும் கூட, அல்லது உங்களின் கதையையும் உள்ளடக்கிய ஒன்று போல என்றாவது கூற வருகிறேன். அப்படி ஒரு வேளை இது உங்களுக்கு முற்ற முழுக்கப் பொருந்திப் போகவில்லை என்றாலும் கூட ஒரு வகையில் அன்றாட வாழ்க்கையில் இது உங்களுக்குத் தெரிந்தவர்களின் (அவர்கள் உங்கள் நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ கூட இருக்கலாம், இருக்கக்கூடும்.) வாழ்க்கையோடாவது கொஞ்சம் பொருந்திப் போகக் கூடும் என்கிறேன். இப்போதைக்கு து.கணேசனுக்கு எழுதிய இந்தக் கடிதத்திலிருந்து தொடங்குவோம். யார்இந்த கணேசன்?

கற்றது கடலளவு தொடர் (ஜு.விகடனில்; வெளி வந்த கடற் பயணம் பற்றிய ஒரு தொடர்) நூலாசிரியர் து.கணேசன். அவருக்கு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டு மறுதலித்த எனது ஒரு ப்ரொப்போசல் (திட்டம் ஒன்று) குறித்து உதவி கோரி எழுதிய கடிதம். ஆரம்பத்தில் உண்மையாகவே நான் அவருக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் இந்தளவுக்கு விரிவானதொரு கடிதமாய் அமையவில்லை தான். என்ற போதிலும் பின்னால்(ள்) இந்தக் கடித சாராம்சங்களை எல்லாம் ஒரு பொது வெளியில் வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியவுடன், அதற்குப் பின்னரே இது குறித்த எனது கூடுதல்; நீட்டிப்பு விஷயங்களையும், பார்வைகளையும், சிந்தனைகளையும் இணைத்துள்ளேன். ஆக இனி இது ஒருவகையில் அவருக்கு மட்டுமல்ல, கின்னஸ் மறுதலித்த இப் புரொப்போசல் சம்பந்தமாக விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள எவர் ஒருவருக்குமான ஒரு திறந்த, பகிரங்கக் கடித மடலாய்க் கூட இதைப் பார்க்கலாம், அணுகலாம். அப்படி ஒரு பார்வை நோக்கோடு அணுகும் எவர் ஒருவருக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவது எல்லாம் ஐயன்மீர், தயவு செய்து இதற்கு முந்தைய தங்களது வழக்கமான எல்லா பார்வை நோக்குகளிலிருந்தும் விடுபட்டு, குறிப்பாக அதிகார வர்க்கச் சார்புள்ள தரப்பினரின் பார்வையுடன் அணுகாமல், மாறாக அதைக் கழற்றி விசிறி எறிந்து விட்டு முழுக்க, முழுக்க, முற்றிலும் மாறுபட்ட ஒரு திறந்த பார்வை நோக்கோடு, காலிக் கோப்பை மனநிலையுடன், நடுநிலையுடன் இதை அணுகுங்கள் என்பதே.

அப்படிப் பட்ட ஒரு நடுநிலை அணுகல் பார்வையில் உண்மையாகவே (கின்னஸ் மறுதலித்த) இப் புரொப்போசலோடு உங்களுக்கும் ஒரு உடன்பாட்டுக் கண்ணோட்டம் ஏற்படுமேயானால், அப்போது…., அப்போது முடிவு செய்யுங்கள். இந்தப் ப்ரொப்போசல் (கின்னஸ் மறுதலித்த இந்தத் திட்டம்); குறித்து, இது விஷயம் குறித்து என்ன நிலைபாடு எடுப்பது? என. அதற்குப் பின்….அதற்குப் பின் நான் என்ன சொல்ல…? நீங்களே புரிந்து கொள்வீர்கள் என்ன செய்ய வேண்டும் இனி அடுத்து என்பது குறித்து. அவரவர் தம் புத்தி, சக்தி, யுக்திக் கேற்றவாறு இப் புரொப்போல் வெற்றியடைய தம்மால் இயன்ற தமது பங்களிப்பை வழங்கலாம். அல்லது நமக்கெதற்கு வம்பு இந்த ரிஸ்க்?!”; என ஒதுங்கிச் சென்றும் விடலாம்.

ஆனால் ஒன்று, தனி மனித முயற்சியாய் இதைச் செயல்படுத்துவது என்பது, அதிலும் ஒரு சராசரி சர்வைவலுக்கேப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள என் போன்ற தனி மனிதன் ஒருவனின் மார்க்ஸியப் பொருளாதாரத்திற்கு இது சற்றும் கட்டுபடியாகாத ஒரு விஷயம். என்பதாலேயே ஒரு குழுப் பணியாய் (டீம் வர்க்காய்- team work ஆக ) செயல் படுத்துவோம் என ஒத்தக் கருத்துள்ளோரைத் தேடும் முயற்சியாய் இதை முதலில் தமிழ் உலகச் சமூகத்தின் முன், அதன் பொது வெளிப் பார்வையில் வைத்துள்ளேன். இனி இந்தக் கடிதக் கட்டுரைகளுக்குள் நீங்களே சென்று போய் பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்….



இந்த முழு விபரங்களையும் கீழ்க்கானும் வலைப்பூக்களிலிருந்தும் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.


No comments: