Tuesday 14 July 2015

ஒரு கோடி இணையத் தமிழ் அன்பர்களுக்கு ஒரு சில வார்த்தைகள்....!

இந்த வலைப் பூவில் உள்ள பதிவுகள் அனைத்தும் புனைவோ, புதினக் கட்டுரையோ அல்ல. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கிலோ, காயப்படுத்தும் எண்ணத்திலோ எழுந்தவையல்ல. ஒரு அர்த்தத்தில் பார்த்தால் 189- சொச்சங்களில் சுவாமி விவேகானந்தர் விட்டுச் சென்ற ஒரு பணியின் பின் தொடர்ச்சி போலத் தான். மாறாக இன்னொரு அர்த்தத்தில் பார்த்தாலோ இது பொதுவுடமைப் பிதாமகர்களில் ஒருவரான கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மற்றும் நம் இந்தியச் சமூகச் சீர்திருத்தவாதிகளான பெரியார், அம்பேத்கர் இவர்கள் விட்டுச் சென்ற ஒரு மாபெரும் பணியின் பின் தொடர்ச்சிப் போலத் தான்.

என்னடா இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? ஆம் இணையத் தமிழ் வாசகர்களே. ஒரு வகையில் இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போடப்படும் ஒரு புதிர் முடிச்சுப் போலத் தான். அவிழ்க்க அவ்வளவு எளிதானா புதிர் முடிச்சா இல்லையா என்று இறுதி வரையில் பார்த்துப், படித்துக், கேட்டுப் பின் ரசித்துச் சுவைத்தோ அல்லதுப் புளித்துப் போயோ நீங்கள் தான், பார்வையாளர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்து சொல்ல வேண்டும். என்னடா இது ஏதோ புதிர் முடிச்சு, கிடிச்சு என ஏதோதோ பெரிய வார்த்தை எல்லாம் விடுகிறாரே ஏதோ பெரிய புதிர் முடிச்சாய் இருக்குமோ? என பிரம்மாண்டமாய் எடுத்த எடுப்பிலேயே துவண்டு தளர்ந்து போய் விடவும் தேவையில்லை. அட இவ்வளவு தானா? நான் கூட ஏதோ டாவின்சிக் கோட் ரேஞ்சுக்கு ஏதோ ரொம்பப் பெருசா இருக்கும் போலனு நினைச்சேன். கடைசியில் ப்பூ இவ்வளவு தானா? எனக் காற்றுப் போன ஒரு பலூன் கணக்காய் சுருக்கமாக, இதை ரொம்பக் குறைச்சலாகவும் எடை போடத் தேவையில்லை.

பின்னே ஸ்வாமி விவேகானந்தருக்கும், மார்க்சியப் பிதாமகர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு, இணைப்புப் பாலம் அமைப்பது என்றால், அதாவது ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே ஒரு தொடர்பு, இணைப்புப் பாலம் அமைப்பது என்றால்..., இன்னும் தெளிவான வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் ஆத்திகர்களும் நாத்திகர்களும் இரண்டு தரப்புமே கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய, ஒரு சமரசத் தீர்வை போன்ற எனது அந்தக் கின்னஸ் மறுதலித்தத் திட்டம் ஒன்றை ஒரு செயற்பாட்டுக்குக் கொண்டு வர முடிந்தால்....,  அதுவும் கூட ஒரு வகையில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போடப்படும் ஒரு வகைப் புதிர் முடிச்சுப் போலத் தான். பீடிகை வட்டத்தின் விட்டம் எங்கோத் தொலை தூரத் தொடு வானக் கடலில் அடி மூழ்கும் கப்பல் போல நழுவிச் செல்கிறதோ? எங்கே போய்விடப் போகிறது ஜி.பி.எஸ் யுகத்தில்?! தேவை ஏற்படும் பொது சாவகாசமாக ஒரு சொடுக்குத் தேடலில் கண்டுபிடித்துக் கொண்டால் போயிற்று! இப்போது ஒரு கேள்வி இணைய வாசக நெஞ்சங்களான உங்களை நோக்கி?

உங்களது வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த 

No comments:

Post a Comment