தமிழகம்,
24.08.2013.
அன்புள்ள து.கணேசன் ஸார் அவர்களுக்கு,
தங்களின் “கற்றது கடலளவு” புத்தக வாசகர்.............. (.............. ......) மாவட்டத்திலிருந்து) எழுதிக் கொள்வது.
என்ன சொல்ல? அற்புதம். அருமையான ஒரு புத்தகம் தமிழ் கூறும்
நல்லுலகிற்கு பயனுள்ள மற்றுமொரு புது வரவாய் அளித்துள்ளீர்கள். அது தாண்டி இத்
தொடர் (புத்தகம்) மூலம் ஒரு பரந்துபட்ட தமிழ் வாசகர்களிடையேயும்
சென்றடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். பல வருடங்களுக்கு முன் அன்று ஜு.வி.யில்
தங்கள் தொடர்வெளிவந்த (மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டுமென்றால்) 2-வது அத்தியாயம் வெளி வந்த வாரம் மட்டுமே படித்து விட்டு
அநியாயத்திற்கு மிரண்டு விட்டிருக்கிறேன் என்பது இப்போது (முழுப் புத்தகத்தையும்
படித்த பின் தான்) புரிகிறது.. அதன் காரணமாகவே அப்போது கப்பலில்
பணியாற்றக் கிடைக்க இருந்த ஒரு சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் கூடத் (டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்த நான் இதற்கு
சம்பந்தமான துறையில்லாது போனாலும்)
தவற விட்டு விட்டேன் என்று கூடக் குறிப்பிடலாம்.
சரி அது போகட்டும். மைய விஷயத்திற்கு வருகிறேன். கணேசன் ஸார் (தங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாமல்லவா?) புத்தக விபரங்களிலிருந்து பார்க்கும் போது தற்போது தங்களுக்கு வயது 47
இருக்கலாம் என நினைக்கிறேன். நானும் சற்றேறக் குறைய தங்கள் வயதுடைவன் தான் என்ற
போதிலும் educational, economical,
social status
ரீதியிலான ஒரு ஒப்பீடு எழுமேயேனால் நான் சற்று
பின்னடைவைக் கூடச் சந்திக்க நேர்வேனா என்னவோ?. தங்களை இப்போது
இந்த மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ளும்............ஆகிய நான் காரணம் இல்லாமல் வெறுமனே ஒரு சம்பிரதாய பாராட்டு மடலாக மட்டுமே இந்தக் கடிதத்தை
எழுதி விடவில்லை. இதற்குப் பின் சீரியதொரு உள் நோக்கம் உண்டு. உதவி கோரும் மனப்பான்மையுண்டு. (உதவி) என்றதுமேயே அதற்காக ஏதோ
பொருளாதார உதவி எனவும் மிரண்டு விடத்
தேவையில்லை.
பொருளாதாரம்
அல்லாத அதே நேரம் உங்களைப் போன்ற பல நாடுகளுக்கும் பயணப்படும் மனிதர்கள் மட்டுமே
செய்யக் கூடிய, அப்படிப்பட்டவர்களால் மட்டுமே
இயன்ற ஒரு உதவி. (அதற்காக ஒரேயடியாகப் பொருளாதார உதவிகளையே
புறக்கணிப்பவனாகவும் கருதி விடத் தேவையில்லை. (புரவலர்களாய் உரிய தக்க, மனிதர்கள் கிடைக்க
வாய்க்கப்பட்டு அவர்களும் தம் மனமுவந்து ஏதேனும் ஒரு விதத்தில் தமது பங்களிப்புகளை, உதவிகளை அளிக்க முன்வந்தால் அதை
ஏற்றுக் கொள்ளவும் தயாரே.) பல நாடுகளுக்கும் பயணப்படும் ஒரே ஒரு
ஒற்றைத் தமிழன் இந்தக் கிரகத்திலேயே நான்
மட்டும் தானா? ஏன் மற்றவர்களை எல்லாம் அணுகக் கூடாதா? என்றும் கேட்டு விடாதீர்கள். எல்லோரும் தான் பயணிக்கிறார்கள். ஆனால்
எல்லோருமேவா ஒரு பயணக் கட்டுரை எழுதி விட முடிகிறது?. எல்லோருக்குமேவா
விரிந்த அளவில் ஒரு எழுத்தாற்றல், பத்திரிக்கையுலகத் தொடர்பு உள்ளது?
பீடிகை எதற்கு? ஆரம்பத்தில் இப்படி (பீடிகை எதற்கு? என்று) நினைத்ததும் என்னவோ
வாஸ்தவம் தான். அனால் இதுவும் (பீடிகையும் கூட) ஒரு கணிசமான அளவில் தேவைப்படும்
போல் தோன்றுகிறதே. பீடிகை எதற்கு? என்ற கேள்வி என்னவோ ஜெட் வேகத்தில்
எழுந்து விட்டது. ஆனால் பதில்… பதில் தான் ஒளியைக் கண்டதும் ஒளிந்து கொண்ட காரிருளைப் போல ஒரு கணம் எனைத்
திகைக்க வைத்துவிட்டது. எண்ண அலைகளை, எழுத்தோவிய முயற்சியை பீடிகை
என்ற சொல்லாடல் பக்கமும் சற்று மடை மாற்றி விட்டது. ஒரு கணத்
தடங்கலுக்கு யோசிக்கத் தவணையாய் ஒரிரு வாரங்களையே விழுங்கி விட்டது. பாலாடையைப்
போல மேலோட்டமான ஒரு சிந்தனை என்றால் அதற்கு இந்தச் சீனப் பெருஞ்சுவர் நீள பீடிகை எல்லாம் தேவையில்லை
தான். ஆனால்
விஷயத்தின் கர்ணகடூரமான கனபரிமானம்
காரணமாக இதுவும் கூட (அதாவது இந்த பீடிகையும் கூட இத்தனை
நீள, ஆழ, அகல கனபரிமானத்தில்,) தேவைப்பட்டாலும் தேவைப்படக் கூடுமோ
என எனைச் சந்தேகிக்க வைத்ததால் தான், படிப்பவர் மன எண்ண ஓட்டத்துக்கும் ஒரு
பலப்பரீட்சையையாய்த் தான், இதை
(இத்தகைய பீடிகைப் பெரும்சுவரையும் தான்), வைத்து தான் பார்ப்போமே நாமும் சற்று… என ஒரு சோதனை முயற்சியாய் தான்
இதை வாசக ஊதுலையில் இட்டுள்ளேன். விமர்சனப் புடம் போட்டு விடியலைச் சுட்டினால், ஏற்றுக் கொள்ளவா மறுக்கப்
போகிறேன்?
பொதுவாகவே ஒரு பெரிய விஷயத்திற்காக ஒருவரிடம் அடிப்போடப் போகிறோம் எனில் முதலில் அந்தப் பெரிய விஷயத்தின் பால் நாம் அணுக (க்காத்து) இருக்கும் நபருக்கு எந்த அளவுக்கு ஒரு ஆர்வம் இருக்கும? என்பது முதலிலேயே, ஆரம்பத்திலேயே தெரியாத நிலையில், முதல் துவக்கப் பிள்ளையார் சுழி
முயற்சியாய் எங்கிருந்தாவது எப்படியாவது ஆரம்பித்து தானே ஆக வேண்டும். அப்படி முயற்சிக்கையில் முதல் துவக்கப்
பிள்ளையார் சுழி முயற்சியே, பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாகி விடக் கூடாதல்லவா?. வெறும் ஆர்வத் தூண்டில் மட்டுமே நம் ஆசைகளை, இலக்குகளை அடையச் செய்து விடாதே. என்ற
போதிலும் எப்படியும் ஒரு துவக்க ஆர்வ முடுக்கத்தையாவது, அதாவது அப்படி என்னதான் இந்தாள்
சொல்ல வருகிறார்? எனக் கடைசி வரை நாம் சொல்ல வந்த
செய்தியைப் படிப்பதற்கான ஒரு துவக்க ஆர்வ முடுக்கத்தையாவது (அளிக்கட்டுமே என்ற
நப்பாசையிலோ அல்லது) அளிக்கக் கூடுமோ?! என்ற எதிர்பார்ப்பிலோ நம்மால் வெளிப்படுத்துப்படுவது தானே இத்தகைய பெரும்
பீடிகைக்கான காரண வியாக்கியானங்கள எல்லாம்;.
ஆர்வம் கூட ஒருபுறம்
இருக்கட்டும் (அல்லது இல்லாமலேயே இருக்கட்டும். இல்லாவிடில் ஏற்படுத்திக்
கொள்ளலாம் அல்லது தூண்டும் விதத்தில் தூண்டினால்
தூண்டி விட்டு விடக் கூட முடியலாம். அது வேறு விஷயம்) ஆனால் நாம் எதிர்பார்க்கும் ஒரு ஒத்துழைப்பை அல்லது ஏதோ ஒருவிதத்திலான அவரது
பங்களிப்பை நமக்களிப்பதன் மூலம் பங்களிப்பவர், அவரது பங்களிப்பை உள்ளடக்கிய
அந்த முழுச் செயல், அந்தச்
செயலின் மொத்த முழு முதல் காரண கர்த்தாக்கள் ஆகிய இவர்கள் எல்லாம் இதனால் அடையக்
காத்திருக்கும், ஆதாயம், அதாவது இலாப நஷ்டம்; என்பது எவ்வளவு? என்ற கேள்விகளும் கூடவே உடன்
எழுகின்றனவல்லவா?. அந்த இலாப நஷ்டம் என்பதும் கூட வெறும் பொன் பொருள், பணம் மட்டுமே சம்பந்தப்பட்டதா? அல்லது பொருளாதார வீச்சுக்கு
வெளி எல்லையிலும் தனிமனித அளவிலோ, அல்லது ஒரு சமூக, வகுப்பு அளவிலோ, அல்லது ஒரு தேசிய இன அளவிலேயோ கூட அது அடையக்
காத்திருக்கும் பெருமித உணா;ச்சி
அல்லது மான, அவமானம் சம்பந்தப்பட்டதா? என்ற இப்படிப்பட்ட மேலும்
சில முக்கிய அடிப்படைத் துணைக் கேள்விகளும் எழுகின்றன, அல்லவா?. பொருள் நஷ்டம் எனில் கூடப் பொருட்படுத்தாத
நம் மக்களில் பலர் மான
நஷ்டம், அல்லது கிட்டத்தட்ட அதற்குச்
சமமான இமேஜ் டேமேஜ் (மதிப்புச் சேதாரம்); என வரும் போது சற்றேத் தயங்கித் தட்டுத் தடுமாறிக் குழம்பி
விடுவதுண்டில்லையா?.
இக் குழப்பம் காரணமாகவே, எழும் தயக்க தடுமாற்றம் காரணமாகவே இறுதியில் அவர்களை, “எதற்கு வம்பு?” எனப் பாதுகாப்பு ஓட்டுக்குள் சுருங்கிய ஒரு நத்தையாய் சுருங்கிக் கொள்ள வைத்து
விடுவதுண்டில்லையா? ஆகச் சரியான தெளிவான முடிவு
எடுக்கத் தெரியாததாலேயே, பயம், குழப்பம், தெளிவின்மை காரணமாகக் கூட நல்
ஒத்துழைப்பை வழங்கக் கூடிய திறன் இருந்தும், வழங்காமல் முடங்கி மூலையில் ஒதுங்கி விடும் அபாயம்
உண்டில்லையா? “பரிசுக்கு ஆசைப்பட்டால் தண்டனைக்கும் தயாராயிரு” என்பது விவேகானந்தரின்
ஒரு கடிதப் பழமொழி. “கொள் என்றால் ஆவென வாயைப் பிளக்கும் குதிரை, கடிவாளம் என்றதும் வாயை
மூடிக்கொள்ளுமாம்.” அதைப் போல பரிசு என்றதும் ஆவெனப் வாயைப் பிளக்கும் நம்மில்
பலர் அதே
அளவுக்குத் தண்டனைக்கும் சேர்த்துத் தயாராய் இருப்பதேயில்லை.
ரிஸ்க்
எடுக்கும் மனோபாவம் என்பதே, அநேகமாக
நமது பொது புத்தியில் இருந்தே, ஒரு
மொழி, இனச்சமூகம் என்ற அளவிலேயே அண்மைக்
கால நூற்றாண்டுகள் சிலவாகவே படிப்படியாகத் தேய்ந்தழிந்து இப்போது சுத்தமாக இற்று
அற்றுப் போயே விட்டதோ என்று தான் அஞ்ச வேண்டியுள்ளது. எனது இந்த கின்னஸ் மறுதலித்தப் ப்ரொப்போசலுக்கென
(திட்டத்திற்கென) ஒரு தனி சித்தாந்தம்,
கொள்கை நோக்கு, அதற்கே உரிய அதன் ஒரு சொந்தப் பார்வை எனச் சில பிரத்யோகக் குணநலன்கள் சில
உள்ளது.
இதைப் படிப்பவர்களுக்கு, அல்லது இது சம்பந்தமாக நாம் அணுகக் காத்திருக்கும் மனிதர்களுக்கு முதலில் அது ஏற்புடையதா? என்பது தெரிய வேண்டும். அப்படி
ஏற்புடையவர்களுக்கு, இது
பற்றிய ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டவர்களுக்கு, இப் புரொப்போசலின் கருத்துக்களோடு ஒரு
உடன்பாட்டு நிலைபாடு கொண்டவர்களுக்கு இதன் பின் விளைவுகள் என்ன என்பது பற்றி அதிகம் ஆழ்ந்து விளக்க
வேண்டியதில்லை. அதற்குப் பிந்தைய
அவர்களின் முடிவெடுப்பென்பது ஓரளவு அவர்களின் துணிச்சல், தைரிய உணர்ச்சி, மற்றும் கூட்டு முயற்சிகளின் மேல்
உள்ள நம்பிக்கை இவற்றை மட்டுமே சார்ந்தது.
அதிகபட்சமாக மிஞ்சி
மிஞ்சிப் போனால் என்ன நிகழக் கூடும்? ஒருவேளை உயிரையேக் கூட இழக்க நேரிடுமா? இல்லை ஆயுள் முழுக்க சிறை வாசமும் சித்திரவதையும் கூடக் கிட்ட நேரிடுமா?. அவ்வளவு தானே? நடத்திக் கொள்ளுங்கள். இதை எல்லாம்
தெரிந்து, எதிர்பார்த்து தானே நாங்களும்
வந்துள்ளோம் எனுமளவுக்கு, அப்படி
ஒரு தயார் நிலை மனோபாவம் உள்ளவர்களுக்கு, தினசரி வாழ்க்கைப் பிரச்னைகள் நாளுக்கு
நாள் மேலும் மேலும் மென் மேலும் மோசமாகி ஒட்டு மொத்த இந்த பூமிப் பந்தே ஒரு நரகமாக
காட்சியளிக்கக் கூடியவர்களுக்கு, அப்படிப்பட்ட
இந்த நரகத்தில் இருப்பதை விட இறந்து போய்ச் சேர்வதே மேல் எனுமளவுக்கு துன்ப
துயரத்தில் உள்ளவர்களுக்கு, இதன்
பின் விளைவுகள் பற்றிய கவலைகள் என்று ஏதும் தோன்ற வாய்ப்பு இல்லை தான்.
ஆனால் இது போன்ற ஒரு
விளிம்பு நிலை, விரக்தி மனோபாவம் இல்லாத மற்ற சாதாரண நபர்களைப்
பொறுத்தவரை, அல்லது சமூக அமைப்பில் ஒரு
குறைந்த பட்ச பாதுகாப்பு எல்(வ)லைக்குள் உள்ள அத்தகைய வசதியான பிரிவினர்களைப்
பொறுத்த வரை இது ஒரு பயமுறுத்தும் ப்ரொப்போசலே. ஆக ரிஸ்க் என்பது இல்லாமல் இல்லை. இதையெல்லாம் முதலிலேயே ஓரளவு தெளிவுபடுத்திவிட வேண்டியது
நம் கடமை. பின் நடுவழியில் ஐயையோ இப்படியெல்லாம் வரும் என்று
தெரியவில்லையே, இதை எல்லாம் ஏன் நீங்கள் முதலிலேயே கூறவில்லை? என்று, அங்கலாய்த்து அலட்டிக் கொள்வதில் ஒரு
பிரயோசனமுமில்லை. அல்லவா?
அதனால்
தான் இதற்கு இவ்வளவு பெரிய பேட் மேன் பட லீடு வசனம் போல ஒரு பெரிய (பீடிகை) லீடு
கொடுக்க வேண்டியதாகிறது.
அப்ப முழுக்க முழக்க இது
ஒரு சாகச துணிகர முயற்சி போல் தானா? ரிஸ்க் எடுக்க அஞ்சுபவர்களுக்கு எல்லாம் இதில்
இடமே இல்லையா? எனில்…, இது ஏதோ சட்டத்துக்குப் புறம்பான ஒரு நிழல் வேலை(யோ)யா?! அப்படி
என்ன தான் திட்டம் (ப்ரொப்போசல்) இது?! இப்படியும் கேள்விகள் (இந்நேரம் பெருவாரியாக இத்தகைய
கேள்விகள் தான்) முளைத்தெழுந்திருக்கக் கூடும். பதில் என்னவோ ஒன்று தான். அனைவர்க்குமே கூட
இதில் பங்களிப்பு இடம் உண்டு தான். ஆனால் யார் முதலில் பூனைக்கு மணி கட்டுவது
என்ற எலிக் கவலைகள் தான் நம் அனைவரையும் பின்னுக்கு இழுக்கக் கூடும். சமூகத்தின்
விளிம்பு நிலை வாழ்க்கை முறையால் அழுத்தப்பட்டு, தலைவலியும் காய்ச்சலும் தனக்கு
வந்தால் தான் புரியும் (ஒரு முறையாவது). என்ற புரிதலனுபவம் உள்ளவர்களுக்கு, அதன் காரணமாகவே இதெற்கெல்லாம் யார், எது காரணம்? என்ற காரணத் தேடலும், தீர்வு தேடலும் உள்ளவர்களுக்கு அப்படிப்பட்டவர்களுக்கு இது உவப்பானதொரு
(திட்டமாகவே) ப்ரொப்போசலாகவே இருக்கும்.
மாறாக அலோக
அணுக்களைப் போல் சமூதாயத்திடமிருந்து, “எனக்கு எடுத்து தான் (அதிகப்) பழக்கம், வழக்கம். கொடுத்தல்ல! என்பவர்களுக்கு, ஏதேனும் ஒரு வகையில் நேரடியாக
இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது சமுதாயத்தைச் சுரண்டி, உறிஞ்சி வாழும் வாழ்க்கை முறை
உள்ள ஒவ்வொருவருக்கும் இது ஏதோ ஒரு விதத்தில் (குறைந்த பட்சம் அவர்களது மனசாட்சியையாவது) அச்சுறுத்தும் ஒரு
ப்ரொப்போசலே”. ஆக கார்ல் மார்க்ஸ் கூறியது போல ஒரு விஷயம் பற்றிய நமது பார்வை, நிலைபாடு, எடுக்கும் முடிவுகள் என்பது கூட நமது சொந்த
முடிவுகள் அல்ல. சமுதாயத்தில் நாம் வகிக்கும் நமது சொந்த வர்க்கப் படி நிலையின்
நிலைபாடே. அதுவே நமது கருத்துக்களிலும் எதிரொலிக்கிறது.
காஷ்மீர் தீவிரவாதியைக் கூட கண்ணியமாகப் படம் எடுக்கும்
பார்ப்பனப் பனியா வர்க்கம், உல்ஃபா தீவிரவாதிகளையும் கூட உயிரே, தில்சே எனக் கண்ணியபப்படுத்தி படமெடுக்கும் பார்ப்பனப் பனியா வர்க்கம், அதே தமிழினப் போராளிகள், தீவிரவாதிகள் என்று வந்து
விட்டால் மட்டும், “குருதிப் புனல்” போல ஒரு அசிங்கச் சேற்றை வாரியிறைக்க சற்றும்
தயங்குவதேயில்லை. எவ்வளவு
வாரியிறைக்க முடியுமோ அவ்வளவு வாரியிறைக்க சற்றும் தயங்குவதேயில்லை. அதிலும் தமிழ் ஈழப் போராளிகளின் விஷயத்தில், அசிங்கத்தின் எல்லைக்கேச் சென்று அசிங்கப்படுத்திப்
படமெடுக்கவும் தயங்கியதேயில்லை.
இது பார்ப்பன, பனியா வர்க்கத்தின் வர்க்க
நிலைப்பாடு.
அந்த ஆதிக்க வர்க்கங்களுக்கு அடிவருடி வேலை பார்ப்பதே
எங்கள் முழு நேரத்தொழில், தொண்டு
என்பது முட்டாள் தமிழ் வர்க்கங்களின் நிலைப்பாடு. ஆக ஒரு விஷயத்தின் பாலான நமது கருத்து, அபிப்ராய நிலைபாடு என்பது, பல நேரங்களில் இல்லையில்லை பெரும்பான்மையான நேரங்களில் நமது சொந்தக் கருத்துகளினால் அன்றி சமுதாயத்தில் நாம்
வகிக்கும் வர்க்கப்படி நிலையைப் பொறுத்ததாகவே கூட அமைந்து விடுகிறது.
அதனால் தான் இதைப் படிக்கும் எவர் ஒருவராக இருந்தாலும்
முதலில் அவரின் (இந்தப் புரொப்போசல் பற்றிய)
நிலைபாடு தெரியாமல் அவரிடம் எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்பதால்
தான் முதலில் அத்தகையவர்களின் நிலைபாட்டைத் தெரிந்து கொள்ள விரும்பியே, அதனாலேயே இவ்வளவு பெரிய நீண்ட
சீனப் பெருஞ்சுவர் நீளத்துடன்
ஒரு பீடிகை.…
நாம் மட்டும் எங்கே? எப்படி? எவ்வளவு? விசையுடன் தாக்க வேண்டும்
என்பது தெரிந்து தாக்கினால் இயற்கைத் தன் ரகசியங்களை எல்லாம் வெளியிடத்
தயாராயிருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர். மனித மனத்திற்கும் இது பொருந்தும். “ஒருமுகப்பட்ட மனத்துடன்
ஊடுருவினால் திறக்கப்பட முடியாத இயற்கையின் ரகசியங்கள் என்று ஏதுமில்லை.” என்பார். ஒருவேளை எங்கே? எப்படி? என்பதில் தெளிவாகச் செயல்படும்
நம்மின் பெரும்பான்மையோர் எவ்வளவு விசையுடன் தாக்க வேண்டும்? என்ற அளவு விஷயத்திற்கு வரும் போது தான்
கோட்டை விட்டு விடுகிறோமோ என்னவோ?. பத்தாயிரம் வோல்ட் மின்சாரத்தைப்
பட்டு நூல் ஒன்றின் வழியாகவும் அனுப்ப முயற்சிக்கலாம், செப்புக் கம்பி ஒன்றின் வழியாகவும் அனுப்ப
முயற்சிக்கலாம், டங்க்ஸ்டன் வழி அனுப்பவும்
முயற்சிக்கலாம். ஆனால் விளைவு தான் வெவ்வேறு, என்பது மின்சாரம் பற்றிய அடிப்படை அறிவுள்ள எவருக்கும்
தெரிந்ததே.
எந்தெந்தப் பொருட்கள் எவ்வெவ்வளவு
வோல்ட்டேஜை அனுமதிக்கும் அல்லது தடை செய்யும் என்பதைப் போல் தான் மனித மனங்களும்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தாங்கு திறனோடு, ஒரு மின் கொள்கலனைப் (மின்னணுவியலில் வரும் ஒரு
உதிரி பாகமான கொண்மியைப் (கெப்பாசிட்டர்-capacitor) போலத் தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ என நான்
கூட பல சமயங்களில் யோசிப்பதுண்டு. டங்ஸ்டனைக்
கண்டு பிடிப்பதற்கு முன் பத்தாயிரம் வெவ்வேறு பொருட்களைச் சோதித்துப் பார்த்த
எடிஸனின் நிலைக்கும்; எனக்கும்
இப்போது அதிக வேபறுபாடில்லை. என்ன ஒரு சிறு வித்தியாசம் எடிஸனின் விஷயத்திற்கு ஜடப் பொருட்களே போதும். எனக்கோ உயிர்ப்புள்ள, உயிர்த் துடிப்புள்ள மனித மனங்கள் சிலவற்றின் கூட்டு ஒத்துழைப்புத்
தேவைப்படுகிறது. இந்தக் கிரகத்தின் பத்து கோடிக்
கலவை(த் தமிழ்) மனித மனங்களிலிருந்து மறை பொருளாக உள்ள அத்தகைய டங்க்ஸ்டன் மனித
மனங்களை மட்டும் தனியே ஜலித்தெடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலை. எண்கணித உதாரணம் கொண்டு விளக்க வேண்டுமானால் ஒன்னாலும்
தன்னாலும் மட்டுமே வகுபடக் கூடிய பகா எண் (prime no) போன்ற மனிதர்களே எனது தேடல்
இலக்கின் இப்போதைய முக்கிய இலக்குப் புள்ளிகள்.
எல்லையில்லாத மெய்யெண்களின்
ஜனசமுத்திரத்தில் குறிப்பிட்ட சில பகா எண்களின் தேடலைப் போன்றது தான். அதையும் அதற்கே உரிய
கணிதவியல் விதிமுறைகள், சூத்திரங்களின் உதவி கொண்டு தேடாது வெறுமனே தேடுவது என்பது (பகா எண்களின் பிரத்யோகப் பண்பு நலன்களை முன்
கூட்டியே அப்பட்டமாக இனங்காணத் தக்க, அப்படிப்பட்ட ஒரு சூத்திரமே இன்னமும்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை, அல்லது அப்படியே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும்
அது வெளிப்படையாகக் கணிதப் பொது வெளியிலேயே இன்னமும்
பிரகடனப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பது வேறு விஷயம்.) வைக்கோல் போரில் தொலைந்த ஊசியை வெறும்
கண்களாலும் கைளாலும் தேடுவதைப் போன்றது தான்.
வைக்கோல் போர் ஊசியை வெறுங் கை கொண்டு வெறும் கண்களாலும் தேடலாம்.
வலிமையான காந்தப் புல உதவி கொண்டும் தேடலாம். (சிறு வயதில் பேரறிஞர் அண்ணா துவாரம் ஒன்றுக்குள் சென்ற ஒரு பந்தை எடுக்க நீர் கொண்டு துவாரத்தை நிரப்பி மிதத்தல் தத்துவத்தைப்
பயன்படுத்தி பந்தை வெளியே எடுத்தது போல, அல்லது பஞ்ச தந்திரக்
கதையில் வருகிற தாகமெடுத்த காகம் ஒன்று நீள் ஜாடியின் அடி மட்டத்திலுள்ள நீரைக்
கற்களைப் போட்டு உயர்த்தியது போல) எது எளிதான தேடல் முறை, உத்தி என்பது சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
எளிய பஞ்ச
தந்திரக் கதை உதாரணங்களைப் போன்ற, அப்படிப் பந்துக்கும், ஊசிக்கும் பயன்படுத்த முடிவதைப் போன்ற, பிரயோகிக்கத் தக்க உருப்படியான, கொஞ்சம் அதிகச் சிக்கலில்லாத, சற்று எளிய வழிமுறைகள் ஏதேனும், இந்தப் பகா எண்களின் விஷயத்திற்கும் சரி, அல்லது எனது கின்னஸ்
திட்டத்துக்கும் சரி வேறு ஏதாவது ஒரு மாற்று வழி (அதுவும் இப்போது இருக்கிற
குறுகிய கால அவகாசத்துக்கு ஏற்ற ஒரு குறுக்கு வழி ஏதேனும்) இருக்கிறதா என்று
தெரியவில்லை. அப்படி
இருந்தால் நல்லது தான். ஆனால் உலகம் முழவதிலும் உள்ள பலப் பலப் பெரிய பெரியக்
கணிதவியல் விஞ்ஞானிகளுக்கே அவை இன்னமும் பெரிய பெரிய, பெரிய்ய்ய்யய…. பெப்பேக் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டிருக்கும்
நிலையில், என்னைப் போன்ற சாமான்யர்களுக்கு மட்டும் அதிஷ்டம் எப்படி அவ்வளவு எளிதில் அருள் பாலித்து விடுமா என்ன?
இந்தக் கிரகத்தின் இன்றைய மொத்த ஜனத்தொகை
(இந்த 2014-ல்) என்ன ஒரு 750 கோடி இருக்குமா? 750 கோடி மனிதர்களையும்
750 கோடி எண்களாகக் கருதினால் இதில் உள்ள மொத்த (ப்ரைம் நெம்பர்களின்) பகா
எண்களின் எண்ணிக்கை என்பது நன்கு தெரிந்த ஒன்றாய் வரையறுக்கப்பட்ட ஒன்றாய் தான்
இருக்க முடியும். (ஒரு இணையப் புள்ளி விபரப்படி சற்றேறக்குறைய 1300 கோடி இயற்கை
எண்களுக்குள் உள்ள பகா எண்களின் சதவீதம் 4.5) ஆனால்
இந்தக் கிரகத்தின் 750 கோடி மக்கள் திரளினரின் அமைவிடம் என்பது 750 கோடி
மெய்யெண்களின் அமைவிடம் போன்றதா என்ன? ஒரே சீரான ஏறுவரிசையில் அததற்கே உரிய
அமைவிடச் சிறப்போடு உள்ள மெய்யெண்களின் அமைவிடம் எங்கே? ஒரு இடத்தில் நிலைகொள்ளாத
மின்னணுக்களின் இயக்கத்தைப் போன்ற மனித நகர்வியக்கம் எங்கே? மின்னணுக்களின் இயக்கத்திற்கும் கூட சில வரம்பெல்லைகள் என ஒன்று உண்டு.
அதுவும் கூட அததற்கே உரிய ஒரு சிறு நீள்வட்டப்பாதையில்.
புறச்
சக்திகள் அதன் மீது செயலாற்றாத வரை அவை, அததற்கே உரிய ஆர்பிட்டலில் ( k,l,m,n,o,p என்ற கூடுகளில்) மட்டுமே அவை இயங்கிக் கொண்டிருக்க
முடியும். அப்படியே ஆர்பிட்
விட்டு இன்னொரு ஆர்பிட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலோ அல்லது அணுக் கூடு விட்டு
இன்னொரு அணுக் கூடு செல்ல வேண்டுமென்றாலோ அவற்றிற்கும்
கூட (பாஸ்போரட், விஸா, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் இன்ன பிற, இன்ன பிற மனித நடவடிக்கைகள்
போன்றே) அததற்கேற்ற விதிமுறைகளை அனுசரித்துத் தான், விதிகளின் படி தான் செல்ல
முடியும். ஆனால் வெகுஜன
மக்கள் திரளினரின் அமைவிடம் என்பதையும், அதிலும் குறிப்பாக அதில்
உள்ள பகா எண் போன்ற மனிதர்களின் அமைவிடத்தையும் ஓரளவுக்கு இயக்கமற்ற (யாரேனும்
ஒருவர் அதன் இயக்கத்தைக் காணும் வரை, அல்லது இயக்கத்துக்குத் தூண்டும் வரை, அது
மனிதனோ அல்லது இயற்கையோ மொத்தத்தில் யாரேனும் ஒருவரால் தூண்டப்படும் வரை
மெய்யெண்களும் கூட இயக்கமற்ற ஜட நிலையில் தானே உள்ளன.) மெய்யெண்களோடு
ஒப்பிடுவதைக் காட்டிலும் எப்பொழுதும் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும்
மின்னணுக்களோடு ஒப்பிடுவது என்பது அப்படியொன்றும் பண்புடைமை அல்லாதது ஆகி விடாதே.
கூட்டலும், கழித்தலும், பெருக்கலும், வகுத்தலும் ஒரு வகையில் இயக்கத்தைக் குறிக்கு
மென்றாலும் அந்த இயக்கம் இயற்கையால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட வில்லை.
மனிதனாலும் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. உண்மையில் மெய்யெண்களை
இயக்கும் சக்திகள், அவற்றை
இயக்கத்திற்குக் கொண்டு வரும் சக்திகள் எவை…? என்று பார்த்தால், இயற்கையால் மட்டுமல்ல இறுதி நிலையில் அவை மனிதனையும் கூட
சுட்டி நிற்கும். எண்களின், இயக்கங்களின் குறியீட்டு வடிவத்தில் என்ன இருக்கிறது. அக்குறியீடுகள் தாங்கி நிற்கும், உணா;த்த முயலும் அர்த்தங்களே, இயக்கவியல் வடிவங்களே மெய்யான நிலைப்பாடுகள்.
தலைப்பின்
மைய விஷயத்திற்கும் இதற்கும் ஒரு நேரடி
சம்பந்தமும் இல்லையே, இது
என்ன தலைப்பை விட்டு விட்டு அநியாயத்திற்கும் வெகு தொலைவிற்கு விலகி விலகியே நடத்திக் கொண்டு சென்று மீண்டும் பிரதான
ஓட்டத்திற்குத் திரும்புகிறாரே எனப் போரடிப்பதாய் கருதுபவர்கள், மிரளும் வாசகர்கள் முன்பே நான்
கூறிய படி பக்- , , , க்கு மட்டும் சென்று பார்த்து
தங்கள் வாசிப்பப் பயணத்தை முடித்துக் கொள்ளலாம். இது ஒரு நீண்ட மாரத்தான்
வாசிப்புத் தேவைப்படும் (அதுவும் பலதுறை வாசிப்பு அனுபவமும் தேவைப்படும்) ஒரு
நீண்ட மாரத்தான் வாசிப்புத் தொடர் என்பதால், துணுக்கு கொறிப்பதைப் போல் கொறிப்பு வாசிப்பு உள்ள துணுக்கு
வாசகர்கள் இந்தப் புத்தகத்தின் ஒன் லைன் நாட் மட்டும் தெரிந்தால் போதும் என்பவர்கள்
எல்லாம் பக்- ,
, , டன் முடித்தக் கொள்ளலாம் என்றே
எண்ணுகிறேன்.
எனவே கணிதம் எனக்குக் காத தூரம் எனக் கணக்குப் பிணக்கு, ஆமணக்கு என முகம் சுளிப்பவர்கள், அறிவியல் என்றாலே எனக்குக் கொஞ்சம்
அலர்ஜி என்பவர்கள், தத்துவம் என்றாலேயே கொஞ்சம் தகராறு
தான் என்பவர்கள் எல்லாம் அந்தந்தத் துறையின் எல்லைகள் தாண்டியதும் கூட மீண்டும்
பிரதான மைய ஓட்டத்திற்கு (இது ஆளுக்கு ஆள் மாறுபடக் கூடும் என்பதால் அவரவர்க்கு
எது பிரதான மைய எழுத்தோட்டம் எனத் தோன்றுகிறதோ அங்கெல்லாம் மட்டும் கூட வந்து
எட்டிப் பார்வையிட்டு) திரும்ப வந்து ஒரு வாசிப்பு ஓட்டத்தை நிகழ்த்திப் பார்க்கலாம். அல்லது முழுவதும் அப்படி என்னதான்
சொல்லப்பட்டிருக்கிறது என முழுவதையும் கூட முயற்சித்துப் பார்க்கலாம். ஆனால்
அதற்காக முழுவதையும் எழுத்து தவறாமல் படித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம்
இல்லை.
விட்ட இடத்திலிருந்து
மீண்டும் தொடருவோமோ? மேலும், மின்னணுக்களின் இயக்க
முறைமை என்பது எண்களின் இயக்க விஷயத்தைப் போல அல்ல. மனிதர்களைப் போல்
அவற்றுக்கும் அவை ஒவ்வொன்றையும் இடம், பொருள், காலத்திற்கேற்றாற் போல்
அவற்றை இயக்கக் கூடிய, அவை அவற்றிற்கே உரிய பௌதிக (க்வாண்ட இயற்பியல்)
இயக்கவியல் விதிகளைத் தன்னகத்தேக் கொண்டுள்ளவை (உட்பொதிந்துள்ளவை.) ஆக மின்னணுவியலை, அடிப்படை அணுத்துகள்களைப் பற்றித் தெரிந்து கொள்வது
என்பதுவும் ஒரு வகையில் மனிதர்களையே தெரிந்து கொள்வது போலத் தான். சுவையானது சுவாரஸ்யமானது.
ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கப்படும் மனிதன் ஒருவன்
குறிப்பிட்ட அந்த சூழ்நிலைக்கு எப்படி எதிர் வினையாற்றுவான் என்பதை எப்படி
நம்மால் முன்கூட்டியே 100 சதவீதத்திற்குத் துல்லியமாக முன்அனுமானிக்க முடியாதோ
அப்படியேத் தான் அணுவுலகிலும். அதைத் தான் விஞ்ஞானிகள் அவர்கள் பாஷையில் இருப்பிடத்தைக்
கண்டுபிடிக்க முயற்சித்தால் வேகத்தை நிச்சயிக்க முடியாது. வேகத்தை நிச்சயிக்க
முடிந்தால் இருப்பிடத்தை நிச்சயிக்க முடியாது என்கின்றனர். இப்போது அணுவுக்கும் உயிர் உள்ளது என்று கூட விஞ்ஞானிகள் கூறத்
தலைப்பட்டுவிட்டனர்
இங்கே இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த
ஹோமியோபதி மருத்துவரான டாக்டர் ராஜன் சங்கரன் என்பவர் தனி அணுக்களின் குணங்கள் என்பவை தனி மனிதன் ஒருவனின்
குணநலன்களையே கூடத் தீர்மானிப்பதில் முக்கியப் பிரதானப் பங்காற்றுகிறது என்று கூறி
அதை விவரிக்கும், விளக்கும் விதமாக, வலியுறுத்தும் விதமாக ஒரு பெரிய
புத்தகமே கூட எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் “The other song” என்ற தலைப்பில் வெளிவந்த அந்தப் புத்தகம் இங்கு நமதூரில் (உள்ளுரில்)
தமிழிலும் கூட மொழி பெயர்க்கப்பட்டு “உனக்குள்ளே ஒரு குரல்” என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் முன்பொரு சமயம் தொடராக வந்து, பின் தற்சமயம் அதே விகடன் பதிப்பகத்தாரால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
மனம், உயிர் பற்றி முடிந்த முடிபாக
விஞ்ஞானம் கண்டுபிடிக்க இன்னமும் ஏராளமான விஷயங்கள் உள்ளதால், நிரப்பப் பட வேண்டிய கோடிட்ட இடங்கள் நிறைய
உள்ளதால் மனித குலம் அது சம்பந்தபபபட்ட புதிய விஷயங்கள் எதையும் முற்றாக ஒதுக்கி விடும் நிலையில் இல்லை தான். அந்த வகையில் பார்த்தால்
ராஜன் சங்கரனும், அவர் குறிப்பிடும் அந்த மேற்கத்திய ஹோமியோபதி அறிவியல் கருத்துக்களையும்
(ராஜன் சங்கரன் அவர்களின் புத்தகத்தின் மையக் கருத்தையும்) கூட அப்படி ஒன்றும்
முற்றிலும் ஒதுக்கி விடத் தேவையில்லை தான். அவையும், அப்படி ஒன்றும்
தீண்டத்தகாத புதிதுமல்ல.
ஏற்கனவேயே இந்தியத் தத்துவியலின் ஒரு
பிரிவான சாங்கியத்
தத்துவியலில் கூறப்பட்ட ஒருக் கருத்துரு தான் அது. (இதையும் கூட நான்
கூறவில்லை. ஏற்கனவேயே சுவாமி விவேகானந்தரின் கூற்றாக ராமகிருஷ்ண மிஷன் வெளியீடு ஒன்றின் பழைய பதிப்பொன்றில் படித்ததாக ஞாபகம்.) இந்து மதத்தின்
ஒரு பிரிவான அல்லது அப்படி ஒரு உப உட்பிரிவாக மறுஉரு
மாற்றம் செய்யப்பட்ட சாங்கியத்
தத்துவமும் கூட மனமும் இந்த ஸ்தூல உடலைப் போல ஒரு நுண்ணியப் பருப்பொருள் தான்
என்றே கூறுகிறது. ஆனால் மிக நுண்ணிய பருப்பொருள் என்று கூறுகிறது.
பருப் பொருளின் மிக நுண்ணிய வடிவளவு என இன்று மேற்கத்திய நவீன அணு அறிவியல்
குறிப்பிடும் அளவு மி.மீ-ல் குறிப்பிட வேண்டுமென்றால் இதை 4ù10-11 மி.மீ-லிருந்து 7.36ù10-8 மி.மீ வரை எனக் குறிப்பிட முடியும். எடை என வரும் போது ஒரு
கிராமை விட (1Æ1027) 1027 பங்கு வரை குறைவு எனவும்
வரையறுத்துள்ளது. (அல்லது ரொம்பத் தலை சுத்தலாக உள்ளதென்பவர்கள் இப்படி படிக்கவும்
அளவு, பருமன் 0.00000000004 மி.மீலிருந்து 0.000000736
மி.மீ வரை (அதாவது மின்னணுவின் பருமனளவு 0.00000000004 மி.மீ நியூக்ளியஸின் அளவு 0.000000736) எடை ஒரு
கிராமை விட 1027 மடங்கு குறைவு. முந்தையது மின்னணு ஒன்றின் அளவு, பிந்தையது மின்னணுவைக் காட்டிலும் 1840 மடங்கு பெரிதாய் உள்ள அணு
நியுக்ளியஸுடையது.
இந்தப் பரிமாணத்தில் உள்ள
அணுத் துகள்களின் உலகமே க்வாண்ட உலகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நுட்பமான க்வாண்ட உலகில் பெருத்த விளைவை ஏற்படுத்தும்
சிறுத்த ஆற்றல் அளவின் பெயர் தான் ப்ளாங்கின் மாறிலி எனப்படுவது. ப்ளாங்கின் மாறிலியை SI அளவீட்டு
முறையில் குறிப்பிட்டால் அதன் மதிப்பு தான் ; 6.55ù10-27
இது நம்மால் கற்பனை கூடச்
செய்து பார்க்க முடியாதளவுக்கு அந்தளவுக்கு அற்பமான ஒரு மதிப்பு.
அற்பமானவைகளுக்கெல்லாம் அற்பமானது. இந்தப்
பிரபஞ்சத்திலேயே அற்பமான ஆற்றல்களின் தலைவன். அரசன், சக்ரவர்த்தி என்று கூடக் குறிப்பிடலாம். அற்ப (ஆற்றல்) சாம்ராஜ்யத்திலுள்ள ஒருக்
குறிப்பிடத்ததக்க, புறக்கணித்து விடவே முடியாத ஒரு சக்ரவர்த்தி.
(இன்று இவருக்கும் போட்டியாய் மேலும் எத்தனையோ நுண் ஆற்ற்ல்கள் க்வாண்ட உலகில் நாளொரு மேனியும் பொழுதொரு கண்டுபிடிப்பாகவும் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்களெல்லாம் இன்னமும் ஒரு அதிகாரப்பூர்வக்
கண்டுபிடிப்புகளின் ஒரு அங்கீகாரப் பட்டியலுக்குள் வரவில்லை. இந்த அற்பளவு ஆற்றல் தான் அணு உலகத்தில் மிகப்
பெரும் ஆற்றலாக உள்ளது. ஒரு அணுவின் எடையை கிராம் அளவில் குறிப்பிட்டால் அது 9ù10-28 ப்ளாங்கின் அளவை
விட அணுவின் எடை குறைவாக உள்ளது. எனவே ஒரு குவாண்ட ஆற்றலானது எலக்ட்ரானைப் பொறுத்த
வரையில் மிக முக்கியமானது. இரண்டும்
ஒன்றோடு ஒன்று உறவாடும் போது எலக்ட்ரானுக்குப் பெருத்த விளைவு ஏற்படுகிறது. 10-27 என்ற
எண் எவ்வளவு சிறியது என்பதை ஒரு உதாரணத்துடன் கூறினால்தான் அதன் சிறுமையும் அதே
நேரத்தில் அதன் மகிமையும் தெரிய வரும்.
(நான்
அறிந்த வரை எளிய,
அழகிய
பழுகு தமிழில் அணுவியல் குறித்து தமிழில் எழுதியவர்களில் க.கதிர் முன்னாள் ஆசிரியர் மணி அவர்கள் எழுதிய அவரது அணு, உயிர், அண்டம் புத்தக விளக்கமே என்னைக் கவர்ந்த
விளக்கமாய் இருப்பதால் அவரது புத்தக விளக்கத்தையே இங்கு நானும் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளேன்.)
ஒரு பொருளின் அளவை 10-27 cm என எண்ணிக்
கொள்ளுங்கள் அப்பொருளைப் பக்கம் பக்கமாக அடுக்கி 1 உஅ நீளம் வரை வைக்க முயற்சி
செய்யுங்கள். எத்தனைப் பொருள் வைத்தால் 1உஅ நீளம் கிடைக்கும் எனப் பார்த்தால் அது 10-27 என்பதை வெறும் கணக்கின் உதவியால் சொல்லி
விடலாம். இனி 10-27 என்றால் அது எவ்வளவு பெரியது அலலது எவ்வளவு
சிறியது என்று பார்க்கலாம். சர்க்கரை பருக்கை ஒன்று அநேகமாக 1 mm இருக்கலாம். 1027 சர்க்கரைப் பருக்கைகளைப் பக்கம் பக்கமாக
அடுக்கினால் அது ஒரு பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிற்குச் செல்லும். அதாவது நமது
பிரபஞ்சத்தின் அளவில் பத்தில் ஒரு பங்கு தூரம். இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் சர்க்கரைத்
துகள் எந்தளவுக்குச் சிறியதோ அந்தளவுக்கு க்குவாண்ட உலகம் சர்க்கரைத் துகளை விடச்
சிறியது. ஒரு புரிதலுக்காக ஒப்பிடப் பிரபஞ்சத்தின் விசுவரூபம் ஒரு பக்கமும்
அணுவின் நுட்பத்திற்கும் நுட்பமான சிறு அளவு இன்னொரு பக்கத்திலிருந்தும் எடுத்துக்
கையாளப்பட்டது. நாம் நடுவில் இருக்கின்றோம்.
இந்தளவு நுட்பமான
பரிமாணத்தில் உள்ள இந்தக் குவாண்ட உலகில் நமது பாரம்பரிய, சாஸ்திரியப் பௌதீகத்தின் விதிகள் செயலற்றுப் போகின்றன. இந்நுண்ணிய
உலகிற்கென்றே பிரத்தியோகமாக அமைந்துள்ள குவாண்டவியல் விதிகளால் தான் பருப்
பொருள்கள் ஆளப்படுகின்றன. இங்கு (இந்நுண்ணிய
நிலையில்) பருப்பொருட்களைப் பொருட்கள் என்று சொல்வது கூடத் தவறு.
ஏனெனில் இந்தளவு நுண்ணிய (10-27 cm ) அளவில்
பருப்பொருட்களின் நிலை என்பது வெறும் பருப் பொருள் நிலை
மட்டுமல்ல. அலை ரூபமான சக்தி வடிவமும் கூட. நாம்
அளக்கும் கருவி, உபகரணங்களுக்கேற்றவாறு, நாம் கையாளும் கணிதவியல்
மாதிரிகளுக்கு ஏற்ப பொருள்கள் பொருள், சக்தி என்ற இருவித நிலைகளாகவும் ஒரு விதத் தோற்றப்
புலப்பாட்டை, உணர்வுப் புலப்பாட்டைக்
காட்டுகின்றன. (இதெல்லாம் எங்களுக்கும் ஏற்கனவேயே தெரியும் உம்முடைய சரக்கு
என்னவய்யா? எனும் மெத்தப் படித்த மேதாவிகாள்
இந்த இடம் உங்களுக்குப் போரடித்தால் நீங்கள் கொஞ்சம் அப்புறம் உள்ளே வரலாம் அல்லது
பக்கம்- ற்குச் செல்லலாம். இது இன்னமும் இது போன்ற அடிப்படைச்
செய்திகளையே அறியாதவர்களுக்காக இது விஷயத்திற்கு துவக்க வாசகர்களாய்
இருப்பவர்களுக்காய் மீண்டும் சொல்லப்படுவது. இதை நான் எனது சொந்தச் சரக்காய்
கூறவும் இங்கு வரவில்லை. எந்த ஒரு சிறு கருத்தாய் இருந்தாலும் அதன் நதி மூல, ரிஷி மூலத்தை மறைத்துப் பெயர் வாங்கிக் கொள்ளும் எண்ணமும் எனக்கில்லை.)
திரு ராஜன் சங்கரன் அவர்களின்
கருத்து (அதாவது அவரது அதர் ஸாங் புத்தகத்தின் கருத்துக்கள்)
எந்தளவுக்கு நவீன மேற்கத்திய அறிவியல் சமூகத்தால் ஏற்று அங்கீகரிக்கப்பட்ட ஒன்று
என்பது தெரியவில்லை. ஆனாலும், அவற்றிலும் கூட சில கூறுகள், உண்மையின் கூறுகளாய் சில கூறுகள் இருக்கக் கூடும். ஜடப் பொருளை ஜடப் பொருளாய் பார்க்காமல்
உயிரோடு சம்பந்தப்படுத்தி பார்த்தாலே, உயிர். ஆன்மா, மறுபிறப்பு
என்ற இப்படிப்பட்டத் திக்கில் திசையில் பேச்சு சென்று விட்டாலே அதை “போச்சுடா இது ஆன்மீகம், அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்திற்கு வந்து விட்டார் போல என இவற்றை அறிவியலை விட்டுத் தூரத் தள்ளி
வைத்து ஒதுக்கி விடும் பழக்கமும் அதனாலேயே அதற்கொரு அரசியல் பன்முகமும் கூட கூடவே
கிட்டிவிடும் பேராபத்து ஒன்றும் நிகழ்ந்து விடுகிறது.
அரசியல்
என்றாலேயே தூர ஒதுங்கி விடும் அறிவியல் கூட, இப்படி ஆன்மீகம், அமானுஷ்யம் பற்றிய விஷயங்கள்; என்று வந்து விட்டாலோ அது இன்னமும் கூடுதலான அளவில் தர்ம
சங்கடப்பட்டு விடுகிறது. ஆராய்பவனை ஆராய வெட்கப்படுத்தும் ஒரு
துறையாக, புதுமணப் பெண்ணின் நாணத்தைப் போல
ஒரு நாணம் ஏற்படுத்தும் துறையாகக் காட்சியளிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், திரு ராஜன் சங்கரன் அவர்களின்
புத்தகக் கருத்துக்கள் பற்றி எல்லாம் கூறுவதற்கு இங்கு என்ன இருக்கிறது? சற்றேப் பொறுத்திருந்து பார்ப்போம் பிள்ளாய் என்பதைத் தவிர. எப்படியும் மனிதனை
மையப்படுத்திய எந்த வொரு ஆராய்ச்சியும் அது ஆன்மீகத்திலாகட்டும், அல்லது அறிவியலில் தானாகட்டும் அல்லது சட்டம், வரலாறு, அரசியல், தத்துவத்தில் தான்
ஆகட்டும் பேசு பொருள் மனிதனை மையப்படுத்திய மறுகணமே
அங்கு அதற்கு ஒரு அரசியல் சார்புத் தன்மையும் கூடவே உடன் எழுந்து விடுகிறது.
அரசியல் சார்புத் தன்மை என்ற ஒன்று முளைத்தெழுந்து விட்ட பின்னாலோ அதற்கொரு நடுநிலை சார்பின்மைத் தன்மை என்பதும் சற்று அந்நியமாகியும்
விடுகிறது. இந்தக் கண்ணோட்டத்திலேயே டாக்டர் ராஜன் சங்கரன் அவர்களின் புத்தகத்தையும் அதில் கூறப்பட்டுள்ள அவரது
கருத்துக்களையும் நாம் நோக்க வேண்டியுளளது.
அவரும் அவரது ஹோமியோபதி
மருத்துவ முறையும், கூட அதையொட்டி அவர் எழுப்பியுள்ள, கேள்விகள், ஆய்வுகள் என்பதுவும் கூட
முடிந்த முடிபான ஒன்றல்ல என்பது மட்டும் உண்மை. அது அரசியலோ, பொருளாதாரமோ, அல்லது அறிவியலாகவே தான் இருக்கட்டும், கலை இலக்கியம் உட்பட அனைத்துத் துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளின்
அங்கீகாரம் என்பது வெற்றி பெற்ற தரப்பினரால் மட்டுமே முடிவு செய்யப்படுவதாய் உள்ள
நிலையில், ஆதிக்க, அதிகார வர்க்கச் சார்பான
கருத்துக்கள் மட்டுமே இந்த உலகால் ஆரவாரமாக வரவேற்கப்படவும் ஏற்று
அங்கீகரிக்கப்படவும் செய்யப்படுகின்றன.
மொத்த அறிவியல் உலகின் அங்கீகாரம் என்பதுவும் கூட
அரசியல் சார்பு இல்லாத நிலைபாடாய் வெளிப்படுவது என்பது, அதுவும் அரிதினும் அரிதான சந்தர்ப்பங்களின் போது மட்டுமே, அதுவும் அரிதினும் அரிதான விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் காலங்களிலும் மட்டுமே.
அதுவும் அண்மைக் காலங்களில் தான் இத்தகைய ஒரு சிறு முன்னேற்றமும் கூட. அதிகார வர்க்கத்துக்கு உவப்பில்லாத எந்த ஒரு ஆன்மீகக் கருத்தும்
மட்டுமல்ல, அறிவியல் கருத்துக்களும் கூட அது
எவ்வளவு தான் ஒரு ஐ.எஸ்.ஓ ரக தரத்தில் இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் அவை ஏற்று
அங்கீகரிக்கப்படுவதில்லை.
மரபியலின் ஆரம்ப அடிப்படை விதிகளைக்
கண்டுபிடித்த, மரபியலின் தந்தை எனப் போற்றப்படும் கிரிகாரியன்
மென்ட்டல் நல்ல உதாரணம். அவரது கண்டுபிடிப்புகளின் வெற்றி, அது இந்தக் கிரகத்தின் மொத்த அறிவியல் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெறுவது
என்பதைக் காண்பதற்கு அவரது மொத்த வாழ்நாளில் மட்டுமல்ல அவர் இறந்து பல வருடங்களுக்குப் பிறகும் கூட அந்த வாய்ப்பு அவ்வளவு எளிதில்
முகிழ்த்து விடவில்லை. அவர் இறந்து 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மூன்று விஞ்ஞானிகளால் மூன்று வெவ்வேறு நாடுகளில் (1900-ல்)
ஒரே சமயத்தில் அவரது கண்டுபிடிப்பு மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு மறு ஊர்ஜிதம்
செய்யப்பட்ட பின்பே அவரது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது.
இல்லாவிட்டால் துரதிஷ்டம் பிடித்த விஞ்ஞானிகளின் ஒரு வரிசையை பட்டியலிட்டால் அந்த பட்டியலின்
வரிசையில் தலைமைப்பட்டியலிலேயே அவரது பெயரை வைக்கலாம் எனும் அளவுக்கு அவ்வளவு
துரதிருஷ்டம் பிடித்த விஞ்ஞானியாய் காட்சியளித்திருக்க மாட்டார். நவீன மரபியலின் பிறப்பும் 35 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிப் போடப்பட்டத்
தாமத நிகழ்வாய் நடந்திருக்காது. அவ்வளவு
பின்னோக்கி 1860-களுக்கு ஏன் போக வேண்டும்.
இதோ நமது காலத்திலேயே நமது கண்ணெதிரிலேயே உள்ள மற்றொரு வாழும், உண்மை உதாரணம். அதன் பெயர் கார்னிங் கொரில்லா க்ளாஸ். உறுதியான உடையாத கண்ணாடி ஒன்று
கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற அயராத கண்டுபிடிப்பு முயற்சி வெற்றியடைந்தாலும், அதன் பலனை அனுபவிப்பதற்கு, வெற்றிக் கனியைச் சுவைப்பதற்கு சற்றேறக் குறைய 40 ஆண்டுகளாவது நாம் காத்திருக்க
வேண்டியதாயிற்று கார்னிங் கொரில்லா க்ளாஸ் விஷயத்தில். கார்னிங் கொரில்லா க்ளாஸ்
எனப்படும் அந்தப் பிரத்தியோகக் கண்ணாடியின் வணிகவியல் வெற்றிக்கு ஆப்பிளின் ஸ்டீவ்
பால்மரும், ஸ்மார்ட் போன் யுகமும், வரும் வரை அதுவும் காத்திருக்கத்
தான் வேண்டியதாயிற்று. ஆக ஒரு கண்டுபிடிப்பு உண்மையாகவே ஒரு மகத்தான கண்டுபிடிப்பு தான் என உலகால்
ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கும் அதையும் தமது வாழும்
நாட்களுக்குள்ளாகவே அத்தகைய அங்கீகாரத்தை கண்ணால் காண்பதற்கும், பலனடைவதற்கும், அதற்கும் கூட ஒரு கொடுப்பினை, பிரா(ர)ப்தம் வேண்டும் போல.
மென்டலின்
வாழ்க்கையும், கார்னிங் கொரில்லாக் கண்ணாடியின்
கதையும் நமக்கு அதைத் தான் அறிவுறுத்துகிறது. ஆக எந்த ஒரு புதிய விஷயமும் அல்லது புதிய கண்டுபிடிப்பும் கூட, சுவாமி விவேகானந்தர் ஏற்கனவேயே முன்பொரு சமயம் கூறிச் சென்றது போல, “தன் காலத்தை விட்டு முற்போக்காகச்
சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் மூன்று படிநிலைகளைத் தாண்டித் தான் வெற்றி பெற்றாக
வேண்டும். அது முதலில் ஏளனம், பின் எதிர்ப்பு, கடைசியாகவே ஏற்றுக் கொள்ளப்படல் என்பது.” ஆக எந்த ஒரு முற்போக்குக்
கருத்தும் கூட வரும் எதிர் காலச் சமுதாயத்தால், சந்ததிகளால் தான் உறுதிப்படுத்தப்படுகிறது.
உண்மையை எத்தனை
நூற்றாண்டுகள் ஆனாலும் அழிக்க இயலாது அது சாகா வரம் பெற்றது என்பது எவ்வளவு
உண்மையோ அதே அளவுக்கு எத்தனைக் கோடி ஆண்டுகள்
பொத்திப் பொத்திப் பாதுகாத்து மறைத்து ஒளித்து வைத்தாலும் பொய்மையின் தற்காலிக உயிர்ப்பையும்
என்றென்றைக்குமான நிரந்தர அமரத்துவம் பெற்றதாக அமையச் செய்து விடமுடியாது.
இப்போதைக்கு இந்த அளவில் மட்டுமே நாம் சற்று ஆறுதல் பட்டுக் கொள்ள முடியும்.
மைய விஷயத்தை விட்டு வெகு தொலைவாகவே வந்து விட்டோம் என நினைக்கிறேன். இதை எல்லாம் ஏன் இங்கு கூற வரவேண்டியுள்ளது என்றால், மனித குலத்தை உள்ளிருந்து இயக்கும்
பௌதிக இயக்கவியல் விதிகளும்; நுண்
அடிப்படைப் பருப்பொருள்களை ஆட்டுவிக்கும் பௌதிக
இயக்கவியல் விதிகளும் மேலும் மேலும் விஞ்ஞான வெளிச்சத்தால் ஒளியூட்டப்
பெற்று ஒன்றை நோக்கி மற்றொன்று நெருங்கி வருகின்ற ஒரு போக்கு அதிகரித்து வருவதைச்
சுட்டிக் காட்டவே.
இறுதியில் ஒரு நாள்
கலப்பிடமில்லாத, போலித்தன்மையற்ற உண்மை அறிவியலும் உண்மை
ஆன்மீகமும் கைக் குலுக்கிக் கொள்ளும் ஒரு இறுதி நாளும் கூட விரைவில் வந்தே தீரப்போகிறது
என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகளைப் போலவே இன்று அறிவியலின் ஆராய்ச்சி
எல்லைகள் மென்மேலும் விரிவடைந்து கொண்டே செல்கிறது. நுண் அடிப்படைப்
பருப்பொருள்களின் வகை மாதிரிகள் இன்று சற்றேறக் குறைய ஒரு சதம் அளவிற்குத்
தனித்தனி அணு வகைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவை ஒவ்வொன்றுக்குமானத்
தனித்துவப் பண்புகளும்; மென்மேலும் துல்லியமாக இனங்காணப்பட்டுக் கொண்டு
வரும் நிலையில், மனித மனங்களின், குணநலன்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முற்றிலும்
புதிய, ஒரு புத்தம் புதிய
வியாக்கியானத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு அறிவியல் பார்வையின் தேவை, அதற்கான ஒரு சமூக, அரசியல், அறிவியல் அங்கீகாரத் தளமும்
கூடக் கூடவேத் தேவை என்பதைத் தான் இன்றைய நவீன போஸான் துகள் (கடவுள் துகள்)
ஆய்வுகள் எல்லாம் சுட்டுகின்றன. ஒரு வேளை மறைமுகமாக (டாக்டர் ராஜன் சங்கரன் கூறுவதைப் போல) இவைகள்
தான் பிரதானக் காரண கர்த்தாக்களோ என்ற ஆர்வமூட்டும் ஐயப்பாடுகளையும் கூடத்
தோற்றுவிக்கின்றன.
“அடுத்த விநாடி” (கிழக்குப் பதிப்பக வெளியீடு)
புத்தக ஆசிரியர் ரூமி சொன்னது போல, “உடல் என்பது கண்ணுக்குத் தெரிகிற மனம் என்றால், மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண் உடல்
தானோ? ” என்ற கூற்றைத் தான் இவை இங்கு
நினைவுபடுத்துகின்றன. இன்று அணுக்
குடும்பத்திற்குள்ளேயே எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான் தாண்டி போஸான், மீஸான் அந்த ஸான் இந்த ஸான் என இந்த அதம அணுக்கள் எனப்படும் அணுக்
கருத்துகள்களின் எண்ணிக்கை மட்டுமே சற்றேறக் குறைய இன்று ஒரு 500 க்கு மேல்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிவியல் புள்ளி விபரம் (மறைந்த அறிவியல் எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் நூல் ஒன்றிலேயே, படித்ததாக ஞாபகம். (தமிழ் வழிக் கல்வியில்
படித்த என்னுடைய மட்டம் இவ்வளவே. சுஜாதா தாண்டி இன்னும் இது விஷயத்தில் கூடுதலாகத் தர முடியும்
என்பவர்கள் தாரளமாக தங்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க இங்கு முன் வரலாம் தடை
ஒன்றும் இல்லை.)
அவற்றில்
பெரும்பான்மையும் ஹைப்போதீசிஸ் எனப்படும் கருதுகோள்களே என்ற போதிலும் இத் துறையில் மேற்கத்திய
அறிவியலின் அசுர வளர்ச்சி நம்மையெல்லாம் அசர வைப்பதாய், அச்சுறுத்துவதாய் உள்ளது. ஆக நாம் இப்போது அந்தளவு ஆழ மட்டத்துக்கெல்லாம்
செல்ல வேண்டாம். மின்னணுக்கள் மட்டத்தில் நன்கு ஊர்ஜிதம்
செய்யப்பட்ட கருத்துக்களின் மட்டத்தோடு மட்டும் நின்று கொண்டு விவாதிப்போம்.
மின்னணுக்களின் உண்மையான உலகிலும் கூட அவற்றை அததற்கே உரிய ஆர்பிட்டலிலும் கூட ஒரு
குறிப்பிட்ட கணத்தில் எங்கே எப்படி இருக்கும்?, எவ்வளவு
வேகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கும்? என்பது பற்றி எல்லாம் நிச்சயிக்கப் பட
முடியாததாய் தான் உள்ளது.
க்வாண்டம் இயற்பியலில் அது பற்றிய ஒரு புகழ்
பெற்ற கோட்பாடே உண்டு. ஹைசன் பெர்க்கின்
நிச்சயமில்லாத் தத்துவம் என்ற பெயரால் அத்தத்துவம் பற்றிக்
குறிப்பிடப்படுவதும் நாம் அனைவரும் ஏற்கனவேயே நன்கு அறிந்த ஒன்று தான். அதாவது இருப்பிடத்தை நிச்சயிக்க (கண்டுபிடிக்க) முயன்றால்
வேகத்தை நிச்சயிக்க (கண்டுபிடிக்க) முடியாது. வேகத்தை நிச்சயிக்க (கண்டுபிடிக்க)
முயன்றால் இருப்பிடத்தை நிச்சயிக்க(கண்டுபிடிக்க) இயலாது. அப்படிப்பட்ட
ஒரு நிச்சயமின்மை அணு உலகிலும் கூட நிலவிக் கொண்டுள்ளதால் ஒரு வகையில் அர்த்தத்தில்
இந்த உவமானத்தில் நான் மின்னணுக்களைத் தடாலடியான ஒரு வம்புக்கு இழுத்திருக்கக்
கூடாது தான். ஆனாலும் என்ன செய்ய? நான் குறிப்பிட வந்ததை உணர்த்த ஏதோ ஒரு விதத்தில் அத்தகைய
உவமானம் பயன்படக் கூடும் என்று கருதியே அப்படிக் குறிப்பிட வேண்டியதாயிற்று.
மைய விஷயத்திற்கு மீண்டும் சற்று
நெருங்கி வருவோம். மெய்யெண்களின் (அல்லது இயற்கை எண்களின்) கணத் தொகுதி ஒன்றில்
ஒவ்வொரு எண்களின் அமைவிடம் என்பதும் நன்கு வரையறுக்கப்பட்டதும், எப்பொழுதும் மாறாததும் ஆகிய ஒன்று. ஆனால் மனிதர்களின், அணுக்களின் அமைவிடம் என்பது…..? மனிதர்களின், அணுக்களின் அசைவியக்கப்
பண்பை எண்களின் எவ்விதப் பண்புடன் ஒப்பிட? என்ற போதிலும் எண்களின் பகா எண் தன்மையை ஏதோ ஒரு விதத்தில் மனித குலப்
பண்புகளுடனும் ஒப்பிட இயலும் தானோ? என்றே தோன்றுகிறது. ஓன்னாலும் தன்னாலும் மட்டுமே
எச்சமின்றி (அதாவது மீதியின்றி) வகுபடும் என்ற பகா எண் பண்பை தனது மனசாட்சிக்கும்
கடவுளுக்கும் (அல்லது கடவுளுக்குப் பதிலாக சத்தியம், தர்மம், நீதி நெறிமுறைகளுக்கு) மட்டுமே
கட்டுப்படும், பயப்படும், மற்ற எதற்கும், எவருக்கும் பயப்படாத, தலை வணங்கிடாத ஒரு வணங்கா முடித்
தன்மையுடன் ஒப்பிடலாமோ எனத் தான் தோன்றுகிறது. சுயநலம், தன்னலம் உள்ள இடத்தில்
எப்படிப்பட்ட அரும் பெரும் குணங்கள் இருந்தபோதிலும் அவையாவும் தன்னலத்தால், சுயநலத்தால் அடிபட்டுப் போக வாய்ப்புண்டு. ஆக
தன்னலம் என்ற ஒரு குணநலனை
ஆன்மாவிற்கு ஏற்பட்ட ஒரு கறையாகப் பார்க்கலாமோ? அதாவது அதை ஒரு கறையாக, ஒரு எச்சத்துடன் ஒப்பிடலாமோ?, அதாவது பகா எணகளையும் ஒன்றையும் தவிர்த்த மீதி எண்களுடன்; ஒப்பிடலாமோ? தன்னலச் சேற்றில் விழுந்து விட்;ட மனிதர்களோடு ஒப்பிடலாமோ? அப்படி ஒப்பிட்டால், அதிலேதும் தவறிருப்பதாய் தோன்றவில்லையே. மனிதர்க்கு மனிதர் சுயநலத்தின் அளவு என்பது தான் மாறுபடலாமே ஒழிய தன்னலமில்லாத
மனிதர் என்பவர் (அதாவது நமது எண்களின் பாஷையில் குறிப்பிட வேண்டுமென்றால் பூஜ்ஜிய அளவு தன்னலம் கொண்ட மனிதர்கள் என்பவர்கள்)
எப்போதும் எந்தக் காலத்திலும் மிகவும் அரிதினும் அரிதானவர்களே. அநேகமாக அப்படிப் பட்டவர்கள் நடைமுறையில் இல்லை நெக்லஜிபுள்
என்றே கூறிவிடலாம் எனுமளவுக்கு அத்தகையோரின் இருப்பு, எண்ணிக்கை என்பது அரிதினும் அரிதே. அப்படிப்பட்டவர்களே
மில்லினியம் ஆண்டுகளைத் தாண்டியும் புத்தன், ஏசு போல ஒரு அழியாப் புகழ்
பெறுகிறார்கள். அத்தகைய புகழுக்குத் தகுதியானவர்களாயும் உள்ளனர்.
அதே போது ஒரு பகா
எண்ணை தன்னலம் இல்லாத அல்லது அப்படியே இருந்தாலும் பொதுநலத்துக்கு ஒரு இம்மியும்
பங்கம் விளைவிக்காத, பொது
நலத்தையும் சேர்த்து உள்ளடக்கிய ஒரு
கலவைப் பண்புடன், தன்மையுடன் ஒப்பிடலாமோ?. நான்
என்ற அகங்கார எச்சமில்லாத பண்புக்குப் பூஜ்ஜியத்தை, அதாவது ஸைபரை ஒப்பிடலாமோ? ஸைஃபருக்குத்
தமிழில் இன்னொரு பெயரும், நேர் எதிர் அர்த்தமும் கூட உண்டு. அது பூரணம்
என்ற பெயர் தான். மதிப்பே இல்லாத ஒன்றிற்கு ஏன் எதற்கு எப்படி பூரணம் என்ற நேர் எதிர்ப் பொருள் தரும் ஒரு பெயரை (பண்டைத் தமிழர்) இட்டிருக்க முடியும்? என என் வாழ்நாளில் பல சமயங்கள், நேரங்களில் யோசித்திருப்பேன்.
மதிப்பே இல்லாத ஒன்றிற்கு
பூரணம் எனப் பெயரிட்டனரா? அல்லது மதிப்பிட முடியாத ஒன்றிற்கு அப்படிப்
பெயரிட்டனரா? அதாவது பழைய புராணத் தமிழ் படமான சரஸ்வதி சபதம்
படத்தில் அரசியார் பாத்திரத்தில் வரும் நடிகைத் திருமதி கே.ஆர்.விஜயா அவர்கள் பேசும் ஒரு வசனமோ, அ.அ.தி.மு.க ஆட்சியின் மாணவ மாணவிகளுக்கான
விலையிலா மடிக்கணினி, விலையிலா சைக்கிள், விலையிலா அரிசி, விலையிலா மிக்ஸி, விலையிலாக் கிரைண்டர் போன்ற விலை இல்லாத பொருட்கள் பற்றிய இந்த பிரச்சாரமோ இந்த
இடத்தில் (இதைப் படிக்கும் வாசகர்களுக்கு) நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி
கிடையாது. அதற்கு இங்கு நான் எடுத்துக் கொண்டுள்ள
பேசு பொருளே காரணம். தமிழக அரசியல்
வாதிகளால் இப்படி பெயரிடப்படுகிற அந்த விலையில்லாப் பொருட்களுக்கெல்ளாம் உண்மையிலேயே ஒரு விலை இல்லையா என்ன? விலை இலாமல் இலவசமாகவா அதைத்
தயாரித்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது?
நிச்சயம் விலை கொடுத்தே
கொள்முதல் செய்யப்பட்ட ஒன்று. அப்படி விலை கொடுத்துக் கொள்முதல் செய்யப்பட்ட ஒன்றை
மக்களின் வாக்குரிமை என்ற இன்னொரு பதில் விலைக்குத் தான், ஒரு பண்டமாற்று
போலத் தான் மாற்றீடு செய்யப்பட்டுள்ளதே
ஒழிய எந்த ஒரு விலையுமே இல்லாமல் அல்ல. உண்மையில்
இலவசமாக வாங்கப்படவுமில்லை. அதே போல் அவை இலவசமாகக் கொடுக்கப்படவும் இல்லை.
ஒரு ஜெண்டில் மேன் அக்ரிமென்ட் போல் நடக்கும் ஒரு பண்டமாற்று என்று தான் கூற
வேண்டும். முந்தைய நாட்களைப் போல், முந்தைய தலைமுறைகளில் போல்
மொத்தத்தையும் அரசியல்வாதிகளே அரசாங்க அதிகாரிகளே சுருட்டிக் கொண்டுவிட முடியாது.
அடிக்கிற கொள்ளையில் ஒரு சிறு துளியேனும் துளியினும் துளியளவேனும் லஞ்சமாக இந்த
வாக்காளப் பெரும் மிருகங்களுக்கும் கொடுத்துவிட்டுத் தான் அப்படிக் கொள்ளை
அடிப்பதற்கான ஒரு உரிமத்தைப் பெற முடியும்.
சுதந்திர
இந்தியாவிலிருந்த காலம் போல் எல்லாம் எந்த அடிமட்ட வாக்காளனையும் இப்போதெல்லாம்
இலவசமாக ஓட்டுப் போட வைத்துவிட முடியாது. அதே நேரத்தில் இன்னமும்
இந்த வாக்காள மிருக இயந்திரங்களும் அது என்ன இவ்வளவு குறைவாளாகக் கொடுக்கிறாயே எனத் தனது
ஓட்டின் உண்மையான மகத்துவம் தெரிந்து கட்டுபடியாகாத ஒரு தொகையை, இலஞ்சத்தையும் எதிர்பார்த்துக்
கேட்டு விடவும் முடியாது, கூடாது.
அதற்காகத் தான், “இது இலவசமாகவே உனக்குக்
கொடுக்கப்பட்டாலும் (உண்மையில் இலவசம் என்பதே ஒரு பெரும் பொய் அந்தப் பெரியப்
பொய்யின் மீது அடுக்கப்படும் இன்னொரு பெரும் பொய் தான்) அதை நானே, எனது ஆட்சியின் வாயிலாய் உனக்கு
நானே முன்னின்று கொடுப்பதால் அதற்கு ஒரு விலை மதிப்பே இல்லை என்ற ஒரு நிலை
ஏற்பட்டு விடுகிறது எனும் வசிய வலை விரிக்கப்படுகிறது. ஏனெனில் நீ என் மீது
வைத்திருக்கும் அந்த அன்புக்கு எப்படி ஒரு விலை மதிப்பே கிடையாதோ, அதே போல் தான் நான் உங்கள் மீது வைத்திருக்கும்
அன்பு, பாசத்திற்கும் ஒரு விலை மதிப்பே
கிடையாது.” என்ற பெயரில் அடுக்கப்படும் மற்றொரு
புளுகு மூட்டை. உண்மையில்
வேண்டுமானால் இப்படிக் கூறலாம். அதாவது சரஸ்வதி சபதம் பட ஸ்டைலில் இதற்கொரு
பொழிப்புரை வழங்க முடிந்தால் இதை இப்படித் தான் விளக்க முடியும்.
வாக்காள
முட்டாள் தனத்தின் அளவு ஆட்சியாளர்களின் ஆணவத்தின் அளவால் அளக்கப் பட்டு ஒரு மாற்றீடு செய்யப்படுகிறது
உண்மையில் மதிப்பிட
முடியாத, அளவிட முடியாத, வரம்பெல்லைகளைக்
கண்டுபிடிக்க முடியாத ஒன்று என இந்த பிரபஞ்சத்தில் ஏதும் உண்டா எனத் தேடிப் பார்த்தால், அப்படிப்பட்ட அந்தத் தேடலுக்கு விடை என ஏதும் ஒன்று உண்டா என்றால் அந்தப் பொருத்தப்பாட்டிற்கு விடையாக
வருவதும் விசும்பு ஒன்றே. வெளியின்
எல்லைக்கு ஏதும் வரம்பு உண்டா என்ன? உண்டு என்றால் அப்படி ஒரு வரம்புக்குச்
செல்லாமலேயே ஒரு மானசீக மனக் காட்சியின், கற்பனைக் காட்சிப்
புலத்திலேயே, ஒரு எல்லைக்குச் செல்லலாம். பின் அந்த
எல்லைக்கு ஒரு எல்லை, பின் அந்த எல்லைக்கு மேலும் ஒரு எல்லை என
நீண்டு நீண்டு, இப்படியே, நீண்டு கொண்டே சென்று
கடைசியில் ஒரு கட்டத்தில் நமது இயலாமையைத் தான் அது உணர்த்த முன் வரும். அது தான்
எல்லையற்ற விண்வெளி என்பது. அந்த நமது இயலாமையே கடைசியில் முடிவிலி, எல்லையற்றது என்ற பொருள் தரும் குறியீடுகளால், அல்லது சுட்டுப் பெயர்களால்
மொழி பெயர்க்கப்படுகிறது (குறிப்பிடப்படுகிறது.)
சரஸ்வதி
சபதத்தில் வரும் அரசியார் பாத்திரத்தின் கருத்தும் கூட ஒரு வகையில் சரியானதே. அதாவது
அது அந்தக் கருத்து சார்பானது. சார்பியல் விதிகளுக்கு உட்பட்டுச் சரியானதே.
அரசியைப் பொறுத்த மட்டில் அந்தப் பொருளுக்கு, அதாவது அவர் உள்ளன்போடு மனதின் உவப்போடு
அளிக்க முன் வந்த அந்த பரிசுப் பொருளானது அளவில் வேண்டுமானால் சிறியதாய்
இருக்கலாம். ஆனால் அந்தப்
பரிசுப் பொருளின் வாயிலாய் அவர் உணர்த்த விரும்பும், அளிக்க விரும்பும் மன உவகையைப் பொறுத்த மட்டில், அதுவும்
அவரைப் பொறுத்த மட்டில்; விலை
மதிக்கவே இயலாதது. அவரைப் பொறுத்த
வரை மட்டும் தான் என்பதற்கு இங்கு மிகுந்த அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். ஆனால்
புராணப் புலவரான சிவாஜி கணேசனின் பாத்திரப் படைப்பைப்
பொறுத்த வரையோ அது அன்பின் வெளிப்பாடாக அல்லாமல் “தான் என்ற அகங்காரத்தின், ஆணவத்தின், அதிகாரத்தின்” குறியீடாய் வெளிப்பாடாய் பார்க்கப் படுகிறது, அதிலும்
அந்த ஆணவம் எப்படி மதிப்பிடப்படுகிறது என்றால் மதிப்பிடக் கூடும் எனக் கூடக் கூற
முடியாதபடிக்கு அந்தளவுக்கு ஆணவத்தின் ஒரு எல்லையிலாத அளவினதாகப் பார்க்கப்படுகிறது.
அர்த்தப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த வெகுமதியையும் ஏற்க மறுக்கிறார்.
இந்த நிலை அரசியாரால் புலவரின் கர்வமாக, அந்தக் கர்வத்தின் உச்ச நிலையாகப் பார்க்கப்படுகிறது. இப்போது அரசிக்குப் புலவரின் கர்வ அளவு ஒரு வரம்பு கடந்த, எல்லை தாண்டிய எல்லையில்லாத
ஒன்றைப் போல அரசிக்குக் காட்சியளிக்க முரண்பாடு முற்றுகிறது. பின் அரசியே சிறையிலடைக்கப்படும் நிலை
எழுந்ததும் இப்போது படைத் தளபதியின் வடிவத்தில் முரண்பாடு மேலும் கூர் பெறுகிறது. அரசி பாத்திரத்தினாலாகட்டும், அல்லது ஜெமினி கணேசன் அவர்கள் நடித்த வீரமல்லன் என்ற கதாபாத்திரத்தினால்
தானாகட்டும் இப்போது புலவரின் மறுப்பு, ஒரு பரிகாசமானப் பார்வையாக, ஏளனப் பார்வையாகப் பார்க்கப்
படுகிறது, அர்த்தப்படுகிறது .இறுதியில் எது, யார்? வென்றது, வென்றார்கள் எப்படித்
திரைப்படம் முடிக்கபட்டது என்ற விஷயத்துக்குள்; எல்லாம் இறுதி நிலை வரை எல்லாம்
நீட்டி முழக்கிக் கொண்டு செல்லாமல் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு, அதாவது பேசு பொருளின் எல்லைக்கு, வரம்புக்குத் தேவைப்படும் விஷயத்திற்கு மட்டுமே இங்கு
வருவோம்.
அதாவது
மதிப்பிடுதல் என்பது வேறு. பெயரிடுதல் என்பது வேறு. மதிப்பிட இயலாத ஒன்றையும் கூட ஏதோ
ஒரு பெயரிட்டு அடையாளப் படுத்த இயலும். ஆனால் அடையாளப்படுத்தப்படும் அனைத்து விஷயங்களையும் இந்த உலகில் (அல்லது கொஞ்சம்
நீட்டித்துச் சொல்வதென்றால் இந்தப் பிரபஞ்சத்தில்) ஒரு மதிப்பிட்டு அளந்து விட
முடியுமா என்றால் முடியாது. மதிப்பிட்டு விட முடியாது. இவ்வளவு நீண்ட
ஜவ்வு மிட்டாய் விளக்கம் ஏனென்றொல் மதிப்பே இல்லாதது என்பதற்கும் மதிப்பை அளக்கவே
இயலாது என்பதற்கும் அல்லது மதிப்பை அளக்க முடியும் ஆனால் சார்பானது என்பதற்கும் இ.டையே அடிப்படையிலேயே மாறுபட்ட
பெரும் பொருள் வித்தியாசங்கள் நிறைய உண்டு என்பதை வலியுறுத்தத் தான்.
கணிதத்தில் சுழி, ஸைபர் என்ற சுட்டுப்பெயரிட்டு விளிக்கப்படும் அந்தக்
குறியீட்டிற்கு உண்மையில் பொருள், தான் என்ன? எண்களின்
எல்லையின்மையைக் குறிப்பிடப் பயன்படும் முடிவிலி என்ற சொல்லின் பொருளுக்கும், பூரணம் என்ற சொல்லின் பொருள்
விளக்கத்திற்கும் இடையே உள்ள இனம் புரியாத ஏதோ ஒரு தொடர்பு இப்போதாவது புரிகிறதா வாசகர்களே. அதாவது எண்களைப் பற்றிப் பேசும் போது எழும்
முடிவிலி என்ற சுட்டுச் சொல்லின் பொருளுக்கும் பூரணம் என்ற சொல் உணர்த்த வரும்
பொருளுக்கும் இடையே உள்ள அந்த இனம் புரியாத ஏதோ ஒரு சொந்தம் இப்போதாவது புரிய
வருகிறதல்லவா? ஒரு அர்த்தத்தில் வெற்றிடம் பற்றிய
ஆங்கில விளக்கமான ஆஃப்ஸன்ட் ஆஃப் மேட்டர் என்பதற்கும் ஆஃப்ஸன்ட் ஆஃப்
நம்பர்ஸ் என்பதற்கும்
இடையே அதிக வேறுபாடில்லையோ? ஆஃப்ஸன்ட்
ஆஃப் நம்பர்ஸ் என்பதும் கூடச் சுழியைத் தவிர வேறு என்ன?.
ஆமாம், எண்கள் என்பவை ஸ்கேலாரா? வெக்டாரா? அதாவது முடிவிலியை நோக்கிய
எண்களின் அமைவு என்பது, அல்லது
பயண இயக்கம் என்பது ஸ்கேலாரா? வெக்டாரா? இது ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் மேற்குலகில் ஒரு காலத்தில் எழுந்த பொருள் முதல்வாதக், கருத்து முதல்வாதச் சர்ச்சையை அதன் எதிரொலியாக எழுந்த இயக்கவியல் வாதம் என்றக் கருத்துருக்களை எல்லாம்
நினைவுபடுத்தவில்லை? அல்லது
மேற்குறிப்பிட்ட விஷயங்களின் தாக்கம், எதிரொலி காரணமாக எண்கள்
உலகினுற்குள்ளும் அந்த சர்ச்சை சித்தாந்தங்களை இழுத்து வரவில்லை? எண்களைப் பொருட்களின் உலகத்துக்குள்
தான் தள்ள வேண்டும் என்பதில்லை. நியாயமாக அவற்றைக் கருத்துலகின்
விளிம்புகளுக்குள் தான்; நாம்
அடைக்க இயலும் என்ற போதிலும் அந்தக் கருத்துருக்களுக்கு எப்பொழுது இயக்கம் என்ற
ஒன்று ஏற்படுகிறது? அதாவது அதற்கு இயக்கம், இயக்கமற்ற நிலை என்பது எப்பொழுது ஏற்படுகிறது? ஒரு கருத்து எப்படிப்
பொருட்களோடு ஏதேனும் ஒரு வகையில் உறவாடும் பொழுது மட்டுமே அதற்கொரு இயக்கவியல்
வடிவம் கிடைக்கிறதோ கிட்டத்தட்ட அந்த அதே விதி எண்களின் விஷயத்திற்கும் பொருந்தும் தான் இல்லையா?;. ஆதலால் தான் எண்களை
அப்படிக் கேட்க இயலாது போனாலும் எண்களின் இயக்கத்தை ஸ்கேலாரா? வெக்டாரா? எனக் கேட்க முடிகிறது?.
பொதுவாக நாம் அனைவரும்
பூஜ்ஜியம் என்றால் ஒன்றுமில்லாத, சூனியத்தைக் குறிக்கப் பயன்படும் ஒரு சொல்லாகத்
தான் நடைமுறை வாழ்வியலில் பயன்படுத்தி வருகிறோம். கணிதத்திலும்
கூட சற்றேறக்குறைய இதே பொருளில் தான் பயன்படுத்தி வருகிறோம் என்ற போதிலும்
கணிதவியலைப் பொறுத்த வரை இடத்தைப் பொறுத்து, அதுவும் கூட மாறுபடுகிறது. அதாவது அது அமைந்திருக்கும் ஸ்தானத்தைப்
பொறுத்து அவ்வப்போது அதன் மதிப்பும் கூட வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு என்பதாக
வரும் என்பது நமக்கும் புரிய வரும். ஆழ்ந்து யோசித்தேமேயானால் அது குறித்த மேலும்
பல உண்மைகள் புரிய வரும். முதலில் அது ஒன்றையே
அதாவது ஸைஃபரை, சூனியத்தை
மட்டும் தான் ஒரு வேளை பூரணத்துடன் ஒப்பிட இயலுமோ? என்ற சந்தேகத்தையும் கூட உறுதிப்படுத்துவதாய் உள்ள அதன் பண்பு நலன்
கூர்ந்து கவனிக்கத் தக்கது.
பூரணம்
என்பது தமிழில் முழுமையையும் குறிக்கும். பூரணத்திற்குத் தமிழில் இன்னொரு சிறப்பு
விளக்கமும் உண்டு. அது “பூரணத்திலிருந்து
பூரணத்தை எடுத்த பின்பு எஞ்சுவதும் பூரணமே” என்ற புகழ் பெற்ற ஒரு கருத்து தான்.
வார்த்தை, வாக்கிய விளக்கமாக
மொழியியலில் இப்படி அர்த்தப்படுத்தப்படுவது தான் கணிதத்தில் 0-0 = 0 எனக் குறிப்பிடப்
படுகிறது போலும். எடுத்தல் என்பதை கழித்தலுடன், அதாவது பிரித்தலுடனும்
கூட ஒப்பிடலாம், (இன்னும் கொஞ்சம் நீட்டித்துச் சொல்வதென்றால்
அதாவது displacement-டன் கூட அதாவது ஒரு இயக்கத்தோடு தொடர்புடைய
ஒரு சொல்லாய் கூட அல்லது முற்ற முழுக்க இல்லை என்றாலும் இயக்கத்தின் ஏதோ ஒரு
வகையைக் குறிக்கும் ஒரு சொல்லாகக் கூடப் பொருள் கொள்ளலாம்.) ஆக
முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் எஞ்சுவது முழுமை என இதற்குப் பொருள்
வருகிறது. மேலே கண்ட இந்தக் கருத்தோட்டத்தை இந்தப் பிரபஞ்சத்திலேயே ஒரே ஒரு விஷயத்திற்குத் தான் பொருத்திப் பார்க்க முடியும்.
அது ஸ்பேஸ் எனப்படும்
வெட்ட வெளி தான் என்பதை நான் மீண்டும் விளக்கவும் தேவையோ?. ஐயா வெளியை நாம் நம் கையால் திட, திரவ, வாயுப் பொருட்களை எடுப்பது போல்
வாரி அள்ளி எடுக்க முடியுமா என்ன? வாயுப் பொருட்களை நேரடியாகக் கைகளால் கையாள
முடியாது போனாலும் அதையும் கூட ஒரு கொள்கலனில் (உதாரணமாக பலூன, சிலிண்டர்; போன்ற ஏதாவது ஒரு கொள்கலனில்) அடைப்பதன் மூலம்
அதையும் எப்படியோ ஒருவழியாகக் கைகளால் கையாள்கிறோம், ஆனால்
வெளியை அப்படிக் கையாள முடியுமா (என்பதே என் வினா?) என்ன?; ஆனால் பருப்பொருளைக்
கையாள்கிறோம் என்றாலே, “ அந்தப்
பொருள் அடைத்துக் கொண்டிருக்கும் வெளியையும் சேர்த்துத் தான் கையள்;கிறோம்” என்று ஏன் வாதிடக் கூடாது? ஆக ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் வெளியையும் கூட
நாம் கையாள்கிறோம் என்றும் தான் அர்த்தமாகிறது. ஆனால் இங்கு நான் கேட்பது, “பருப்பொருளால் அடைத்துக் கொள்ளப்படாத
“சுத்தமான வெட்ட வெளியைக் கையாள
நம்மால் நமது விஞ்ஞானத்தால் இயலுமா? முடியுமா? ” என்று
தான் கேட்கிறேன்.
பொருள் இயங்குகிறது என்றாலே அந்தப் பொருள்
அடைத்துக் கொண்டிருக்கும் வெளியும் கூடவே சேர்ந்து இயங்குகிறது என்றும் தான்
பொருள். ஆக வெளியும் ஒரு வகையில் இயங்குகிறது என்று
தான் அர்த்தம். நேரடியாக அதை நம் வெறும் கண்களால் நாம் காண முடியாது போனாலும்
புறப் பருப்பொருள்களின் இயக்கத்தினூடே நாம் பார்ப்பது உண்மையில் வெளியின்
இயக்கத்தையும் கூடவே சேர்த்து தான். அப்படி
வெளியும் இயங்குகிறது என்றால் இயக்கம் பற்றிய நமது புரிதலிலேயே ஒரு பெரும்
அடிப்படை பார்வை மாற்றம் ஏற்படுவதை இங்கு நாம் உணர முடியும். வழக்கமான
இயக்கம் பற்றிய நமது பாரம்பரியக் கருத்தோட்டத்திற்கு இரண்டு கருத்தோட்டங்கள், அதாவது இரண்டு அடிப்படைகள், பின்னணிகள் தேவை. ஓன்று
நிலையான இயக்கம் அற்ற ஒரு பின்னணி. இரண்டு, அந்தப் பின்னணியின் மீது இயங்கக்
கூடிய, இயங்க வேண்டிய ஒரு பொருள் அல்லது
பல பொருள்கள்.
அதாவது இயக்கம்
என்றாலேயே அதைப் பொருட்களோடு மட்டுமே சம்பந்தப்படுத்தி யோசித்து வந்த நமது
பாரம்பரியச் சிந்தனை முறைக்கு, அதை
இப்போது அரூபமான வெட்டவெளிக்கும் சேர்த்து நீட்டிப்புச் செய்து யோசித்துப் பார்ப்பதில்
சற்றுப் பெரியக் குழப்பமே ஏற்படக் கூடும் தான் என்ற போதிலும்
இந்தப் புதிய கண்ணோட்டம் குறித்தும் நமது கணித, பௌதிக விஞ்ஞானிகள் சற்று ஆழ்ந்து
யோசிப்பதும் கூட நல்லதே. ஆனால் எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கின்றன எனும் பட்சத்தில் எதை நிலையான
பின்னணியாக அடிப்படைத் தளமாகக் கொள்வது?.
மிக நவீன இயற்பியல் இன்று
பொருள் என்பதே வெளியின் திரிந்த ஒரு வடிவம் என்று தான் கூறுகிறது. ஆக நாம் காணும் அத்தனைப் பருப்பொருள்களும் ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் வெளியின்
திரிந்த வெவ்வேறு வடிவங்களே. பொருள் என்பதை வெளியின் ஒரு ரூப வடிவம் என்றும் கூடக்
கூறலாம். கண்ணுக்குத்
தெரியும் ரூப இயக்கவியல் வடிவங்களையே நாம் இன்னமும் தெளிவாக முழுக்கப் புரிந்து
கொள்ள முடியாத நிலையில் புலன்களுக்குப் புலனாகாதா அரூப இயக்கவியல் வடிவங்களை
எல்லாம் எப்படிப் புரிந்து கொள்ள? அடுத்ததாக பொருளுக்குள் வெளி உண்டு என்றாலே
அதாவது பொருளுக்குள் அடைத்துக் கொண்டிருப்பது வெளி என்றாலே உடன் வெளியிலும் இரண்டு
வகைப் பிரிவு உண்டோ? என்பது போன்ற ஒரு கேள்வி எழுகிறது.
அதாவது
பொருட்களால் அடைத்துக் கொள்ளப்பட்ட வெளிகளெல்லாம் ஒரு வகை. பொருட்களால் அடைத்துக்
கொண்டு ஆக்ரமிக்கப்படாத வகையெல்லாம் மற்றொரு வகை வெளி. அதாவது வெளி உலகில்
உள்ள இன்னும் குறிப்பான, தெளிவான வார்த்தைகளில்
குறிப்பிட வேண்டுமென்றால் இந்த மொத்தப் பிரபஞ்சத்தையே தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள
கட்டுண்டிராத வெளியைக் குறிப்பிடலாம். ஆம், கட்டுண்டிராத வெளி தான். பொருள் அடைத்துக் கொண்டிருக்கும்
வெளியை ஒரு வகையில், ஒரு
அர்த்தத்தில் கட்டுண்ட (அதாவது கட்டுண்ட, அல்லது பிளவு பட்ட, நசுங்கிய, சிதைந்த, சுருங்கிய அதாவது இன்னும் தெளிவான வார்த்தைகளில் கூறினால்
திரிபடைந்த, பருப் பொருளினால் பாதிப்படைந்த )
வெளி என்று கூடக் கூறலாம். ஐன்ஸ்டீன் கூட வெளி பொருட்களால் வளைக்கப்படுகிறது என்று தான் அல்லது
பொருட்களைச் சுற்றியுள்ள வெளி பொருட்களின் நிறையீர்ப்பு விசையின் காரணமாக வளைக்கப்பட்டுள்ளது என்று தான் கூறியுள்ளாரே தவிர, பொருட்களின் தாக்கத்தால் வெளியே
உடைந்ததாகவோ அல்லது வெளியையே உடைக்க முடியும் என்றோ கூறியதாக ஞாபகமில்லை.
வெளி
எப்படி பொருட்களைச் சிறை பிடித்துள்ளதோ அப்படியே பொருட்களும் வெளியைச் சிறை
பிடித்தே உள்ளன. கருந்துளைகள்
ஒளியைக் கூடத் தப்ப விடுவதில்லை தங்களது அசாதாரமான நிறையீரப்பு விசை காரணமாக
என்றால் கருந்துளைக்குள் உள்ள வெளியை எந்த பிரிவில் சேர்ப்பது. பொருட்களின் வெவ்வேறு வகை மாதிரிகளும் வெளியின் வெவ்வெறு
திரிந்த அல்லது நசுங்கிய வடிவம் தான் என்றால் அப்போது நாம் ஒரு உடைந்த வெளியைப்
பற்றிக் கற்பனை செய்ய வேண்டியதில்லை. பொருட்களின் அத்துனை வகை மாதிரிகளும் ஒரு
வகையில் பிளவு படாத ஒரே வெளியின் திரிந்த அல்லது நசுங்கிய பல வடிவங்களோ என்ற ஒரு
உருவகம் கிடைக்கிறது. ஹிந்து மதத்தின்
அத்வைதக் கருத்துருவிற்கு இதை விடவும் வலிமையானதொரு உதவி கிடைக்கப் போவதில்லை.
மீண்டும் மைய விஷயமான பூரணத்துக்கே வருவோம்.
பூரணம் என்பது முழுமையானது என விவரிக்கப்படுவதாய் கூறியிருந்தேன். அதுவும் எப்படிப்பட்ட முழுமை? அந்த முழுமையிலிருந்து முழு
முழுமையையும் எடுத்த பின்னும் எஞ்சுவது. எஞ்சுகின்ற அந்த எச்சத்தின் பண்பு
எத்தகையது என்றால் அதுவும் முழுமையானது என்பது தான். அதாவது பூரணமான ஒன்று தீர்ந்து
போகக் கூடியதன்று. இன்னமும்
தெளிவானதொரு வார்த்தைகளால் குறிப்பிட வேண்டுமானால்
பூரணமான ஒன்றை, அழிக்க முடியாது, அதாவது அதை பூரணத்தை இருப்பற்றுப் போகச் செய்ய முடியாது.
இதை ஒரு எளிய உதாரணம்
கொண்டு விளங்கிக் கொள்ள முயல்வோம். ஒரு அறையில் ஒரு பெட்டியில் 10 மாம்பழங்கள்
உள்ளன என்று வைத்துக் கொள்வோம். 10 பழங்களையும் யாருக்காவது எடுத்துக் கொடுத்தும்
விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். பின் அந்தப் பெட்டியில் மாம்பழம் என்றதொரு
பொருள் இருக்குமா? இருக்காதல்லவா? தீர்ந்து போய் விடுமல்லவா? இப்படித் தீரும் பண்புள்ளதல்ல பூரணம் என்பது. (உண்மையில் மாம்பழமும் கூட இடப்
பெயர்ச்சி தான் அடைந்துள்ளதே யன்றி இல்லாமலே போகவில்லை. இடப் பெயர்ச்சிக்கும் சுத்தமாக இல்லாமலே போவதற்கும் இடையே
நிறைய ஏராளமான வித்தியாசம் உள்ளது. அடிப்படையிலேயே நிறைய வேறுபாடு உள்ளது.)
ஆனால் மாம்பழம் இருந்த பெட்டி மட்டும்
இருக்கும். எடுத்து அதையும் யாருக்காவது தானம் செய்;துவிடுகிறோம் என்று
வைத்துக் கொள்வோம். இப்போது அந்த மாம்பழப் பெட்டி வைக்கப் பட்டிருந்த அறையும் அந்த
அறையைத் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ள அந்தக் கட்டடமும் மட்டும் தான் இப்போது
இருக்கும். கட்டடத்தையும் இப்போது ஒரு ராட்சத இயந்திரத்தின் துணை கொண்டு பெயர்த்து
எடுத்து தூர வைத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம் பின் என்ன இருக்கும் அந்த
இடத்தில்? இப்படியே நீட்டித்துக் கொண்டு போனால் இதை இந்த
முழுப் பூமிப் பந்திற்கும், பின் இந்த முழு சூரிய மண்டலம், ஏன் பின் கண்ணுக்குத் தெரியும் இந்த முழுப் பிரபஞ்சத்தையும் கூட பெயர்த்தெடுத்து
தூர அப்பால் வைப்பதாய் நீட்டித்துக் கொண்டே போகலாம். நான் இங்கு கூற வருவது
இப்படியே நீட்டித்துக் கொண்டே செல்வதையல்ல அல்டிமேட், கடைசி, இறுதி நிலை என்பது என்ன? நான் உணர்த்த வருவது என்ன என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள இயலும் என்று
நினைக்கிறேன். (ஒரு பாமரப் பார்வை வெளியின் புலத்துக்கும் எட்ட வேண்டுமென்பதற்கே
இந்தளவு இவ்வளவு நீண்ட ஜவ்வு.)
ஐயா மாம்பழத்தில் ஆரம்பித்து இந்த
முழுப் பிரபஞ்சமுமே கூட கடைசியாய் எதில் நிலை கொண்டிருக்கின்றன? இதனால் தான் சிம்புளாக
அந்தக் காலத்தில் “சுவரில்லாமல் சித்திரமா?” என்றனர். ஏன் துணியில், பேணரில், பேப்பரில், கட்டவுட்டில் வரையலாமே என்ற விதண்டா வாதம்
பேசாது அந்தப் பழமொழியில் உள்ள உட்பொருளை, தத்துவத்தை மட்டுமே பார்க்க
வேண்டுகிறேன் (G.I.joe ஹாலிவுட் படத்தில்
வரும் ஒரு காட்சியைப் போல-இணைப்பைக் கிளிக் செய்யவும்) இன்று சுவரும், துணியும்,காகிதமும், பேனரும் கூடத் தேவையில்லை.
வெறும் காற்றுமண்டலமே கூடப் போதும். இல்லையில்லை வெட்ட வெளியே கூடப் போதும்.
முப்பரிமாண ஹோலோகிராம் காட்சிகளை திரையில் ப்ரொஜெக்ட் செய்யும் சினிமாக் காட்சி
போல வெறும் வெட்ட வெளியிலேயே காட்சிகளைக் காட்சியிட முடியும்.
சித்திரத்திற்கு எப்படி
ஒரு சுவரோ, துணியோ, அல்லது காகிதமோ என ஏதோ
ஒரு பேக்ரவுண்ட் எப்படி அடிப்படைத் தேவையோ அப்படித் தான் இந்த முழுப்
பிரபஞ்சத்திற்குமேயே, வெளி…. இந்த வெட்ட வெளி
தான் ஆதாரமாக உள்ளது. அந்த வெளியை நம்மால் இடப்பெயர்ச்சி (ரீப் பிளேஸ்- replace) செய்ய முடியுமா என்று தான் கேட்கிறேன். முழு வெளியையும் வேண்டாம். முழுக் கடலுக்குப் பதிலாக சில
துளி நீரை எப்படி ஒரு மாதிரியாக (சேம்பிளாகக்) கொள்கிறோமோ அப்படி, அதாவது முதலில் வெளியை உடைக்க
முடியமா? என்பது தான் கேள்வி?. முழு வெளியையும் வேண்டாம். அந்த வெளியின் ஒரு
சிறு துளியை நம்மால் ரீப்பிளேஸ் செய்ய முடியுமா? அல்லது அப்படியே
ரீப்பிளேஸ் செய்து முடித்தாலும் அந்த இடத்தில் மீண்டும் ஒரு வெட்ட வெளி இருக்காதா?. இந்த உவமானமும் ஒரு வகையில் தவறே. நீர் உள்ள கொள்கலனில் இருந்து
அந்நீரை அக் கொள்கலனுக்கு வெளியே வேறொரு கொள்கலனில் சேமிக்கிறோம் எனறால் முதல்
கொள்கலனில் கட்டாயம் நீர் ஒரு கட்டத்தில் குறைந்து கொண்டே வந்து பின் ஒரு
கட்டத்தில் நீரே இல்லாமல் போகும். இல்லாமல் போதல்
என்றால் இது போன்ற இல்லாமல் போதலல்ல. முதல் கலத்திலிருந்து இரண்டாம்
கலனுக்கு நீர் மாற்றப்பட்டுள்ளது என்று தான் அர்த்தமே தவிர சுத்தமாக
நீரே இல்லாமல் போதல் அல்ல. அதாவது முதலில் வெளியை
உடைக்க முடியமா? என்பது
தான் கேள்வி?. அல்லது ஏற்கனவேயே வெளி பிளவுபடாத, கட்டுண்டு விடாத ஒரு வெளியாய் தான் உள்ளது. ஆனால் பிளவு
பட்டுள்ளதாய், கட்டுண்டுள்ளதாய் நமக்குக் காட்சியளிப்பதெல்லாம்
நமது புலன்களின், அல்லது நமது அளக்கும் கருவிகளில் உள்ள குறை பாடு
காரணமாகவா?
நீரை உடைக்க முடியுமா? என்று யாரும் கேட்பதில்லை? ஏனெனில் நீர் என்பதே ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் என்ற இரண்டு வாயுப் பொருட்களின்
கூட்டுக் கலவை என்பதுவும் அது 2:1 என்ற விகிதத்தில் இணையும் போது நீரின்; ஒரு மூலக்கூறு வடிவம் தோன்றுகிறது என்பதுவும் இன்று பள்ளிக் குழந்தைகளும்
அறிந்து கொண்டுள்ள ஒரு எளிய உண்மை. மொத்ததில்
இறுதியாகக் கூறுமிடத்து திட, திரவ, வாயுப் பொருட்களுக்கு பிளவுண்ட
அதாவது உடைபட்டத் தன்மை என்ற வரையறை ஒரு பவுண்டரி எல்லை உண்டு.
பரந்து விரிந்த
கடலிலிருந்து ஒரு துளி நீரைப் பிரிப்பது போல எல்லையில்லாத இந்த வெளியிலிருந்து ஒரு
துளி, ஒரே ஒரு துளியின் துளி அணுவளவு
ஆகாயத்தையாவது அதாவது வெளியையாவது முழு வெளியிலிருந்து பிரிக்க முடியுமா? என்பது தான் கேள்வியே.
பருப்
பொருட்களில் அடிப்படைத் துகள்களில் ஆரம்பித்து யூரேனியம் போன்ற கனத் தனிமங்கள் வரை
எப்படி ஒரு படிநிலை இருக்கிறதோ அப்படி ஒரு படிநிலை ஏன் வெட்ட வெளியின் அமைப்பிலும்
இருக்கக் கூடாது? பருப் பொருள் மட்டத்தில் பொருளில் உள்ள 3
படிநிலையான திட, திரவ, வாயு பொருட்களில் திடமும்
திரவமும் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக் கூடிய கட்புலண் பொருட்களாகும். வாயு நிலையை
எட்டிய ஒரு பொருள் கட்புலன் தன்மையை இழந்து விடுகிறது. இதே போன்ற, இதையொத்த ஒரு நிலை பொருட்களின் பருமன் அணுமட்டத்திற்குச் சுருங்குகையிலும்
தலைகாட்டுவதைக் காணலாம். குவாண்ட உலகம் எனப்படும் அந்த நுண் உலகில் தான் அணு, அணுக்களுக்கான அடிப்படைத் துகள்களின் (அதம அணுக்களின்) இன்னொரு நுண் உலகச்
சாம்ராஜ்யம் குவாண்ட உலகம் என்ற நாமகரணத்தோடு அதற்கே உரிய பௌதிக விதிகளால்
ஆளப்படுவதாய் தொடங்குகிறது.
அத்தகைய க்வாண்ட உலகில்
தான் பொருட்கள் முதன் முதலாக தங்களது நுண்ணிய துகள் தன்மையை மட்டும்
வெளிப்படுத்துவதாய் இல்லாமல் அலைப் பண்புகளையும் வெளிப்படுத்துவதாய் அமையப்
பெற்றுள்ளது. அதாவது பொருட்களின் அலைப் பண்பும் துகள் பண்பும் சங்கமமாகும் ஒரு
பொது இடமாய் காட்சியளிக்கிறது. இந்த இடத்தில் ஒரு
புரிதலுக்காக பொருட்களின் அலை வடிவத்தை திரவமாகவும் துகள் வடிவத்தை திடமாகவும்
பாவித்தோமோனால் அப்போது அங்கு ஒரு வாயு போன்ற இன்னொரு அரூப நிலை வடிவம் ஏன்
இருக்கக் கூடாது? வெளியின் திரிந்த நசுங்கிய வடிவத்தின் எளிமையான இன்னொரு
நிலையாய் அது ஏன் இருக்கக் கூடாது? பருப்பொருள் என்பதே வெளியின் ஒரு திரிந்த (திரிபடைந்த, மாற்றமடைந்த என்ற பொருளில்) நசுங்கிய வடிவம் தான் என்றால் திரிபின், நசுக்கத்தின், அளவினைப் பொறுத்து சுத்தமான வெட்ட வெளியின் இந்த
அமைப்பிலும் ஏன் பல படிநிலைகள் இருக்கக் கூடாது?. இதைப் புரிந்து
கொள்வதற்காக இன்னும் எளிமையான உவமானம் ஒன்றின் வழியாகக் கூற வேண்டுமானால் அடர்த்தி என்ற பண்பைக் குறிப்பிடலாம். பொதுவாக திட, திரவ, வாயுப்
பொருட்களுக்கு மட்டுமே நாம் இது வரைக் கற்பித்து வந்த அடர்த்தி என்ற பண்பு ஏன்
வெளிக்கும் இருப்பதாய் பாவித்துப் பார்க்கக் கூடாது? (அடர்த்தி என்றால்
அப்படியே அடர்த்தி என்ற பொருளில் அல்ல. அதையொட்டிய சற்றேறக் குறைய அதே போன்ற ஒரு
தன்மை ஏன் வெட்ட வெளிக்குள்ளும் நாம் எதிர்பாரக்கக் கூடாது?
பிளவுபட்ட நிலை, உடைபட்ட நிலை என்பது எல்லாம் ஒரு வகையில் அணுக்களின் செறிவு, அடர்த்தி என்பதோடு (மறைமுகமாவாவது) சம்பந்தம் கொண்டவை தானே?. பருப் பொருட்களின் ராஜ்ஜியம் 10-15 செ.மீட்டரிலேயே முடிந்து விடுவதால்
அங்கிருந்து தொடங்கும் நுண் க்வாண்ட உலகம் இன்னும் நுண்மையானதொரு எல்லையில் கூட
முடியக் கூடலாம் யார் கண்டது? அத்தகைய நுண் நிலையைக்
கண்டறிவதற்கான வசதி வாய்ப்புகளும் அதற்கேற்ற மேம்பட்டத் தொழில் நுட்ப வசதிகளும்
இன்றைய நிலையில் இல்லாமல், இன்னமும்
கண்டுபிடிக்கப் படாமல் கூட இருக்கலாம். அதாவது சுத்தமான வெட்டவெளி
என்று நாம் இது வரை கருதிக் கொண்டு வருவது பருப் பொருள் அடைத்து ஆக்ரமித்துக்
கொள்ளாத வெளியின் முதல் படிநிலையையோ அல்லது
அப்படிப்பட்ட படிநிலைகளின் முதல் சில படிநிலைகளையோத் தான் என்பதாகக் கூடக் கருதிக்
கொள்ளலாம். அதற்கும் அப்பால் உள்ள க்வாண்ட உலகம் வரை உள்ள நிலையில் மேலும் பல
எண்ணற்ற படிநிலைகளும் கூட (ஃபில் இன் தி பிளங்க்ஸ், கோடிட்ட இடங்களை நிரப்புக ஸ்டைலில்) இருக்க நேரிடலாம்.
அப்படி
பாவித்துக் கொண்டால், அந்த
சுத்த வெட்ட வெளியின் முதல் படிலைநிலைக்கு அப்பாலோ அல்லது முதல் சில
படிநிலைகளுக்கு அப்பாலோ உள்ள ஒரு நிலையிலிருந்து க்வாண்ட உலகம் வரை உள்ள பல
எண்ணற்ற (கோடிட்ட நிலை வரை உள்ள) படிநிலைகளையே இனிமேல் தான் விஞ்ஞானம் கண்டுபிடிக்க
வேண்டும் எனும் ஒரு நிலை கூட இருக்கலாம். அந்த வகையில்
பொருளின் சக்தி நிலைகளில் ஒன்றான அலைப் பண்பு என்பதுவும் கூட ஒரு வகையில்
நுண்வெளியின் ஒரு வகைப்பட்ட நசுங்கிய வடிவம் தான் என கூட நாளை வரும் எதிர் கால விஞ்ஞானம் நிரூபிக்கக் கூடுமோ
என்னவோ? அப்படி நிரூபிக்கப் படும் போது, அப்போது தான் நசுக்கமே, திரிபே பெறாத ஒரு சுத்த வெட்ட
வெளியைப் பற்றிய ஒரு உண்மையான தேடல் தொடங்கும். அந்த எல்லை எங்கிருந்து
தொடங்குகிறது? எது வரை அதன் விதிகள்
வியாபித்துள்ளன?. எங்கிருந்து அதன் முதல் நசுக்கச் சுருக்கம் தொடங்குகிறது. நசுங்கிய வெளியின் நசுக்கச் சுருக்கத்தை
அளவிட முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு பதில்
கிடைக்கும் போது தான் உண்மையிலேயே வெளி ஏற்கனவேயே உடைபட்டு விட்ட ஒன்றா? அல்லது அது எப்பொழுதும் உடைபடவே
முடியாத ஒரு முழு அமைப்பா? என்பது
பற்றி எல்லாம் ஒரு தெளிவு பிறக்கும்?
எல்லையற்றது
இரண்டாய் இருக்க முடியாது எனும் ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றும் இங்கு ஒரு
சிறிது யோசிக்கத்
தக்கது.
ஏனெனில்
எல்லையற்ற ஒன்று எப்போதும் உடைபட்டு பிளவுபட்டு, பின்னப்பட்டும் இருக்க முடியாது. தர்க்க ரீதியாக எல்லையற்றது என்பது
எப்போதும் ஒருமைப்பட்டு இரண்டற்றதாய் மட்டுமே இருக்க முடியும்,
இதுதான்
அணுக்கள் மட்டத்தில் குவாண்ட உலக மட்டத்துக்குள் செல்லுகையில் பொருளுக்கும் சக்திக்கும்
பொருந்தும் நியூட்டனின் ஆற்றல் மாறாக் கோட்பாடு ஒரு வகையில் வெளிக்கும்
கூடப் பொருந்துமோ என்ற கேள்வியை இது
எழுப்புவதையும் தவிர்க்க இயலவில்லை. பொருந்தும் என்று தான் தோன்றுகிறது, வெளியை உரு மாற்றம் செய்யலாமே ஒழிய வெளியையும் புதிதாக ஆக்கவோ, உருவாக்கவோ, உடைக்கவோ, அழிக்கவோ முடியாது என்பது தானே
பொருள்.
ஐயா அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம் போல்
ஒரு விஷயம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளதென்றால் அதுவும் (ஒரு வேளை வெளியை இந்த வெட்ட
வெளி ஒன்று மட்டும் தானே.
வெளிக்குள் வெளி என எத்தனை வெளிகள் தான் சொருகப்பட்டுள்ளது (ஸுப்பர் இம்போஸ் செயயப்பட்டுள்ளது) என்பதற்கும் ஏதும் எல்லை உண்டா
என்ன? இதை இன்னும் கொஞ்ச எளிய உதாரணம் கொண்டு புரிய
வைக்கவேண்டுமானால் ஒரு கணினியின் ஒரு சாளரத்தை (விண்டோவை எடுத்துக் கொள்வோம்.
அதில் ஏதாவது டவுண் லோடு ஆகிக் கொண்டிருக்கும் போதே மற்றொரு விண்டோவைத் திறந்து
இன்னொரு பணியைச் செய்கிறோம். அந்தப் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இன்னொரு
பணிக்காக மீண்டும் இன்னொரு விண்டோவை திறந்து பணியாற்றுகிறோம் ஆனால் அவை அனைத்தும்
எப்படி ஒரே கணினியின் திரையிலிருந்தே தோன்றியதோ கிட்டத்தட்ட இதே போன்றே
விண்வெளியிலும். கண்ணுக்குப் புலனாகும்
அனைத்துப் பருப் பருப்பொட்களுமேயே, ஒரு வகையில் ஒரு நவீனக்
கணினியின் ஒரு விண்டோ போலத் தான். வெட்டவெளி தான் இங்கு மானிட்டர். ஓன்றுக்குள் ஒன்றாக ஸுப்பர் இம்போஸ் செய்தது போல இந்த
மாபெரும் பிரபஞ்சமே வெட்ட வெளிக்குள்ளிருந்தே கிளம்பி வந்துள்ளன.
ஆக ஸைபர், பூரணம், பூஜ்ஜியம் என்ற இந்தப் பல பெயர் ஒரு பொருள் சுட்டுப் பெயர்ச்
சொற்களெல்லாம் இறுதியாகச் சுட்டுவது ஒரே ஒரு விஷயத்தைத் தான். அது அந்த வெட்ட வெளியையே.
ஸைபர் என்பது ஒரு வகையில் எம்டி ஸ்கிரீன் போல. அந்த எம்டி
ஸ்கிரீனைப் பார்க்கவிடாது மறைக்கும் எந்த ஒன்றும் உண்மைக்கும் சேர்த்துத் திரையிடுவது
போலத் தான். உண்மைக்கும் நமக்கும் இடையிலே உள்ள ஒரு மாயத் திரைப் போலத்
தான். திரைகளை ஒவ்வொன்றாய் கிழித்துக் கொண்டே சென்றோமேனால் எஞ்சுவது குணங்களற்ற
உண்மையே. அதாவது இந்துமதப் பாஷையில் கூறுவது
என்றால் நிர்க்குணப் பிரம்மம்.
மற்ற
எண்களை எல்லாம் சகுணப் பிரம்மம் என அழைக்க ஒரு தர்க்கப் பொருத்தம் உள்ளதென்றால்
ஸைபரை ஒரு நிர்க்குணப் பிரம்மம் என அழைக்க அதற்கு எல்லாவித தகுதியும் உள்ளது என்று
தான் தோன்றுகிறது. (சகுணப் பிரம்மம்-குணங்களோடு கூடியது. நிர்க் குணப் பிரம்மம்-குணங்களற்றது.
கடவுள் ஒரே நேரத்தில் இரண்டுமாகவும் இருக்கிறார் என ஹிந்து மதம் கூறுகிறது.)
தனித்த ஸைபருக்கு
எங்கேனும் இயக்கப் பண்பு உண்டா என்ன? எண்களுக்குத் தான் ± குறி உண்டு. ஸைபருக்கு எங்கேனும் மைனஸ் ஸைபர், ப்ளஸ் ஸைபர் எனக் குறியிடப்பட்டு பயன்படுத்தியதை நாம் கண்டு
கேள்விப்பட்டதுண்டோ? அதெப்படி தசம ஸ்தானத்திற்கு வலப்புறமா இடப்புறமா என்பதைப் பொறுத்து சைபரின் மதிப்பிலும் ஒரு சிறிது இடத்தைப்
பொறுத்து மாறுபடுகிறதில்லையா? அப்படியிருக்கையில் சைபரை எப்படி நிற்குணப்
பிரம்மத்தோடு ஒப்பிட முடியும் எனக் கூட இதில் சிலர் கேட்கக் கூடும். இதற்கும் கூட சைவ சமய நோக்கில் பார்த்தால் இந்த லாஜிக்கும் அடிபட்டுப் போய்விடும் வாய்ப்புள்ளது.
ஆக, எச்சத்தோடு (அதாவது மீதியுடன்)
வகுபடுதல் என்பதை சோரம் போதல், அடிபணிதல், விலை போதல் போன்ற மனித குணங்களோடு ஒப்பிட இயலுமேயானால், அப்படிப்பட்ட இந்த ஒப்பீடு ஏற்று
அங்கீகரிக்கப்படவும் இயலுமேயானால் பகா எண் போன்ற மனிதர்களை எதற்கும் சோரம் போகாதவர்களாயும்
எந்தக் காலத்திலும், எந்த
நிலையிலும் சோரம் போகாதவர்களாய், (இடம், பொருள், காலம் என்ற நிமித்த
காரணங்களுக்கும்) அடிபணியாதவர்களாய், விலை போகாதவர்களாய் குறிப்பிட முடியும்.
( அடிபணிதலும்
இருவகையில் நடைபெறலாம் ஒன்று அச்ச வசத்தால் அதற்கு ஆட்பட்டு அடிபணிந்து போதல்.
அல்லது 2) ஆசை வசத்தால் அதாவது சபல வசத்துக்கு ஆட்பட்டு நடைபெறுவதாய் இருக்கலாம்.)
ஆக, சுயநலம் என்ற பண்புநலன் ஒரு
சிறிது, சிறு அற்ப அளவிலேயே இருந்தாலும்
கூட அவர்களை சாதாரண எண்களின் வரிசையணியில் தள்ளிவிட முடியும்.
எண்களின் எண்ணிக்கை ஏறுவரிசையில் பெருகுவதை மனித குலத்தின் பல்கிப் புழுத்துப் பெருகும்
மக்கள் தொகையுடன் ஒப்பிட முடியும்., அப்படிப் பட்ட அந்த மக்கள் தொகையின்
ஒட்டு மொத்தக் குணாம்சயங்களையே பகா எண்களையும் உள்ளடக்கிய மெய்யெண்களின்
குணாம்சங்களுக்கும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும்.
குறைவான
எண்ணிக்கையில் சுருங்கிய அளவினதாய் இருந்த போது எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பகா
எண்களைப் போலவே குறைவான எண்ணிக்கையில் சுருங்கிய மக்கள் தொகையாய் இருந்த காலத்தில்
தரமான மனிதர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு குறைவு இருந்ததில்லை. அதுவே எண்ணிக்கையில்; பல்கிப் புழுத்து ஏறுவரிசையில்
பெருகுகையில் அந்த அதிகரிப்பு விகிதாச்சாரத்தை அனுசரிப்பது போன்ற ஒரு எண்ணிக்கையில்
பகா எண்களின் எண்ணிக்கையும் எப்படி அதிகரிப்பதில்லையோ அப்படியே தான் நல்ல தரமான
மனிதர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு பற்றாக்குறைப் பஞ்சமே நிலவுகிறது..
பார்வை வளையத்தின் வரையறுக்கப்பட்ட ஒரு
பரப்புக்குள் உள்ள வரையறை செய்யப்பபட்ட பகா எண்களைத் தேடுதல் என்பதே வைக்கோல் போர் ஊசியைப் போலத் தான் தேட வேண்டியுள்ளது என்றால் பார்வைப் புலத்தின் வரையறைக்கு வெளியே உள்ள ஒரு வட்டத்தின்
தொடு கோடு (tangent) போல
அமையப் பெற்ற பகா எண்களைப் பற்றி எல்லாம் சொல்ல வேண்டியதே இல்லை.
அளவில்
சிறிய ஒரு பகா எண் என்பது ஒரு குழந்தையின், கள்ளங்கபடமற்ற மழலை நிர்வாணம் போல. பணம், பதவி, ஆசாபாசம், பயம், பாலுணர்வு போன்ற அடிப்படைக்
கறைகள் படியாதது. இன்னமும் சோரம் போகாதது. சோரம் போதல் என்பதற்கு பொருள் அர்த்தமே
கூடத் தெரியாதது. யாவரும் காணக் கிடைப்பது. எளிதில் புலப்படக் கூடியது. தோற்றப்
புலப்பாட்டுக்கு உட்படுத்துவதும் எளிது.
ஆனால்
அளவில் பெரியதொரு பகா எண் விஷயமோ நன்கு வளர்ந்த மனிதர்களின்
கபட நிர்வாணம் போல. கபட வட்டத்தின் விட்ட அளவைப் பொறுத்தது. வான் கிரகங்களின்
உப்பலைப் போன்றது. சாதாரண பாமரப் பார்வைப் புலப்பாட்டின் வரம்பெல்லைக்கு அப்பாற்ப்பட்டது.
அது சார்பானது. இடம், பொருள், காலம், ஏவல், மனிதர்களைப் பொறுத்தது.
அதன்
புலப்பாட்டுத் தோற்றமானது, புவிப்பந்தின்
வட்டத் தன்மையைப் பிரத்தியட்சமாகப் பார்த்து உணர இப்புவி பரப்பின்
மேற்பரப்புக்குள்ளேயே, புவியெங்கும்
அலைந்து திரிந்து எங்கு தேடினாலும், எப்படித் தேடினாலும், அதற்குத் தோதான, வசதியான, வாட்ட சாட்டமான ஒரு இடத்தை எப்படி இந்தப் புவிப்
பந்திற்குள்ளேயே அதன் புறப்பரப்பின் மேலேயே இருந்து கொண்டு தேடும் வரை எப்படி
நம்மால் கண்டுபிடிக்க முடியாதோ, கிடைக்காதோ அப்படித் தான், (அதாவது யூகித்துப் பார்க்கத் தெரியாத ஒரு சாதாரண பாமர அறிவிற்கு என்ற அளவில்) பெரிய அசுர பகா எண்களின் பகா
எண் தன்மையை உணர்வது என்பதற்கும்.
புவிப்பரப்புக்கு வெளியே தேவைப்படுகிற ஒரு ஸாட்டிலைட் பார்வையின் தேவையைப்
போல் அளவில் பெரிய அசுர பகா எண்களை இனங்காண்பதற்கும் ஒரு பிரத்யோக இடம், பார்வைத் தளம் தேவைப்படுகிறது.
எண்களின் எண்ணிக்கையைப்
பொறுத்த வரையில் ஏறுவரிசையில் பல்கிப்
புழுத்துப் பெருகுகையில், பகா எண்கள் ஒரு ஒழுங்கற்ற வரிசையிலும் அளவில்
பெரிய அசுர எண்களான தோற்றப் புலப்பாட்டுடனும் தான் வெளிப்பாட்டுக்கு வருகின்றன. அத்தகைய பகா எண்களில் குறிப்பிட்ட ஒரு பெரிய அசுர பகா எண்
எங்கே எந்த அளவு பெரியதான ஒரு வடிவத்தில் எப்படி (எத்தனையாவது பகா எண்ணாக) வரும்
என்பதை எல்லாம் முன்
கூட்டியே அறிந்து கொள்ள கணிதவியலில் எப்படி ஏதும் (தற்சமயத்தில்) ஒரு வழிவகை
இல்லையோ அப்படியே தான் இப்போது எனது விஷயத்திற்கும்.
இராமானுஜத்திற்கு
ஒரு ஹார்டி போல, இராபரட் க்ளைவுக்கு ஒரு மோர்ஸ்
போல, மார்கன், பாகோபென்னுக்கு ஒரு மார்க்ஸ்
எங்கெல்ஸ் போல, மார்க்ஸ், எங்கெல்ஸுக்கு ஒரு லெனின் போல, லெனினுக்கு ஒரு ஸ்டாலின் போல, கம்பருக்கு வாய்த்த சடையப்ப வள்ளலைப் போல, எனக்கான, எனது கின்னஸ் மறுதலிப்புத்
திட்டத்திற்கான மீட்பர் (புரவலர்) இந்தப் பரந்த மனித குல
சமுத்திரத் திரளுக்குள் எங்கே எப்படி பொதிந்து வைக்கப்பட்டுள்ளனரோ? எல்லாம் வல்ல அந்த இயற்கைக்கே
வெளிச்சம்.
அடிப்படைத் தனிமங்களையும், மெய்யெண்களின் கணத் தொகுதியையும் ஆராய்வது என்பது ஒரு வகையில், மனித மனங்களையே, அவற்றின் பலவித குணநலன்;களையே ஆராய்வது போலத் தான் போல. எண்களை என்ன தான் ஆராய்ந்தாலும், அவற்றிலும் பிடி கொடுக்காத பகா எண்கள் எப்படியோ கிட்டத் தட்ட அப்படி தான் தனிம
ஆராய்ச்சியிலும். எண்களைப் போல் எல்லையில்லாத எண்ணிக்கையில் உள்ளவையல்ல அவை என்ற
போதிலும் அங்கும், அவற்றிற்கு என்று, சில வரம்பெல்லைகள் உண்டு. இயற்கையின் படைப்பில் 92 தனிமங்களாக அவை இன்று
சுட்டப்பட்டாலும், இந்தத் 92 தனிமங்களுக்குள்ளாகத் தான்
பொருட்களின் மூன்று முக்கிய வடிவங்களான திட, திரவ, வாயு நிலைகள் காணப்பட்டாலும், அந்தத் திட, திரவ, வாயு நிலையை நிர்ணயிக்கிற
அம்சங்களில் ஒன்றாக மின்னணுக்கள் இருந்த போதிலும், அதிலும் வெளிப்படாத, இன்னும் புரிபடாத ஏதோ ஒரு
சூட்சும அம்சம், இயற்கையின் சூட்சும அம்சம்
உள்ளது என்பது மட்டும் புரிகிறது. ஆனால் அது என்ன,
எந்த விதமான சூட்சுமம்
(பொருட்களின் திட திரவ வாயு நிலைக்குக் காரணமான அந்த ஏதோ ஒரு வித சூட்சுமம் என்ன)
என்பது பகா எண்களைப் போலவே இன்னமும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு மர்ம முடிச்சாகவே
உள்ளது.
எப்படி வண்ணங்கள், ராகங்கள் பல ஆயிரக்கணக்கில் இருந்த போதிலும் அவற்றின் அடிப்படைகள் ஏழு
ஸ்வரங்களுக்குள், ஏழு நிறங்களுக்குள் அடக்கமோ அப்படி. (ஏழு நிறங்களுக்கும்கூட அடிப்படை மூன்றே மூன்று பிரதான
நிறங்கள் என்று தானே காரணம் கூறுகிறார்கள். அல்லது நமது மூளைக்கு
ஆயிரக்கணக்கான வண்ணங்களைப் பிரித்தறியும் திறன் இருந்தாலும் அவற்றிற்கெல்லாம் மிகவும் அடிப்படையானது மூளையிலுள்ள மூன்றே
மூன்று கூம்பு வடிவ செல்கள் தான் காரணம் என்றோ இப்படி ஏதோ ஒரு வித மூன்றால்
சுட்டப் பெறும் ஒரு தன்மையேக் குறிப்பிடப்படுகிறது.) பருப்பொருட்களின்
கலப்பு வகைகள் பலக் கோடிக்கணக்கில் இருந்தாலும், அவற்றின் அடிப்படை வகைகள்
இன்று நவீன மேற்கத்திய விஞ்ஞானத்தின் படி 92-ஏ. இந்த 92-களுக்குள்ளே தான் திட திரவ, வாயு என்ற மூன்று நிலைகளும் கூட அடக்கம். திட, திரவ, வாயு என்ற இந்த நன்கு தெரிந்த 3 நிலையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.
பிரபஞ்ச ஆதிக் கணத்தில், அண்டப் பெரு வெடிப்பின் போது ஏற்பட்ட பெரு வெப்பநிலையில் அணுக்களும், அணுக்களுக்கு அடிப்படையான அதம அணுக்களும் (அணுத்துகள்களும்) தோன்றிய அந்தப்
பெரு வெப்ப நிலைக்குக் கூடச் செல்லவே வேண்டாம், அந்நிலையில் பருப்பொருளே
இன்னுமும் முழுமையாகத் தோன்றியிராத அந்நிலையை ஏதோ ப்ளாஸ்மா என்றெல்லாம் பெயரிட்டு வர்ணிக்கிறார்களே
அந்த அளப்பரிய ப்ளாஸ்மா வெப்ப நிலை நிலை வரை எல்லாம் கூட நாம் ஆழ்ந்து செல்ல
வேண்டாம். (இப்போதைக்கு இந்தத் திட, திரவ, வாயு என்ற 3
நிலைகளுக்குள் மட்டும் நின்று கொண்டு விவாதிப்போம்) ஹைட்ரஜனில் தொடங்கி
யுரேனியத்தில் முடியும் அடிப்படை அணுக்களில் எவை எவை எல்லாம் திடப் பொருள்கள், எவை எவை எல்லாம் திரவ, வாயுப் பொருட்கள் என்பதைத் தெளிவாய்க்
குறிப்பிடும் விஞ்ஞானம் எந்த அம்சம் ஒரு பொருளை திடப் பொருளாகவோ, அல்லது திரவ, வாயுப் பொருட்களாகவோ நிர்ணயம் செய்கிறது என்ற
விஷயத்தில் ஒரு குழப்பச் சித்திரத்தையே அளிக்கிறது. தனிமங்களின் கனத் தன்மையா? அல்லது அதன்
ஒரு வெள்ளை நிற (சூரிய)
ஒளியில் ஏழு நிறங்களும் இருந்தாலும், இந்த ஏழு நிறங்களுக்கும் அடிப்படை மூன்று
பிரதான நிறங்களான சிவப்பு, ஊதா, பச்சை மட்டுமே. அதே போல இந்தப் பிரபஞ்சத்தில் இயக்க வேகத்திற்கு ஒரு
வரம்பெல்லையாக எப்படி ஒளியின் வேகத்தை இயற்கை நிர்ணயித்துள்ளதோ, அதே போல் தான் நுண்ணிய
பருப்பொருள்களின் கனத் தன்மைக்கும் ஒரு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. யுரேனியத்திற்கு அப்பால் இயற்கை எந்த ஒரு
பருப்பொருளையும் படைத்திருப்பதாகத் தெரியவில்லை. செயற்கை முறையில் மனிதன்
யுரேனியத்தைக் காட்டிலும் அத்தகைய பெரிய கன தனிமங்களை உருவாக்கினாலும், அல்லது உருவாக்க முயற்சித்தாலும் அவை எல்லாம்
ஸ்திரத் தன்மை பெற்றதாய் இல்லை. மேலும் அப்படி உருவாக்கப்படும் அவற்றின்
ஆயட்காலங்களும் அற்ப சொற்பத்திலும் அற்பம். ஆக மேன்மை தாங்கிய கன தனிமங்களின் அணு நியூக்ளியஸும்
கூடக் எவ்வளவு கன(ண)ம் பொருந்தியதாய் இருக்கலாம் என்பதற்கும்
இயற்கை ஒரு கடைசி உச்ச வரம்பை நிர்ணயித்தே உள்ளது.
92
புரோட்டான்களுக்கு மேல் சென்றால் அத்தகைய அணுக்களின் நிலைப்புத் தன்மை
நிலையில்லாததாய், அற்ப ஆயட்காலங்களைக் கொண்டதாய்
தான் உள்ளது. வெட்ட வெளி
முடிவின்றி எல்லையின்றி அனந்தமாய் இருக்கக் கூடும். கூடலாம். ஆனால் அந்த வெட்ட
வெளியை நுண்ணிய அளவில் தன்னகத்தே கொண்டிருக்கும் நுண் பருப் பொருட்களை எவ்வளவு
பகுக்க, சிதைக்க, நசுக்க முடியும்
என்பதற்கும், அல்லது கன தனிமங்களின் பொருண்மை அளவு
எந்தளவிற்குப் பெரிய நிறையுடையதாய் இருக்கலாம் என்பதற்கும் அந்த இயற்கையே ஒரு
வரம்பெல்லையை நிர்ணயம் செய்துள்ளது. திரு ராஜன்
சங்கரன் தனது புத்தகத்தில் கூறியுள்ளது
போல் மொத்த மனித குலத்தையும் இந்த 92 அடிப்படைத் தனிமங்களின் வகைகளுக்கள்
பட்டியலிட்டு வகைப் படுத்த முடியுமா என்று தான் தோன்றுகிறது.
பண்டைய இந்திய சாங்கியத்
தத்துவமும், பண்டைத் தமிழ் சித்தர் பாடல்களும் கூறுவது போல மனித மனம் என்பது ஒரு நுண்ணிய பருப் பொருளே எனில்
அதில் நவீன மேற்கத்திய அறிவியல் இன்று இத்தனை(92) வகை என பிரித்துள்ளது எனில் அந்தப் பருப் பொருட்கள் ஒவ்வொன்றின் பிரத்யோகக்
குணங்கள் தான் என்ன? அதுதான்
ஒவ்வொரு தனி மனிதனின் பிரத்யோகக் குண நலன்களிலும் கூடப் பிரதிபலிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. ராஜன் சங்கரன் ஏற்கனவேயே அது அப்படித் தான்
என்று கூறுகிறார். அன்று நாம் பொருட்களின் நிலையை வெறும் ஐந்தே
ஐந்து பஞ்ச பூதங்களாகப் பிரித்துக் கொண்டது போல இன்று நவீன மேற்கத்திய அறிவியல்
அதை 92 ஆகப் பிரித்துக் கொண்டது. ( “வெளி” தவிர்த்து 92) கணிதத்தில்
எப்படி ஒரு வாக்கியம் “between any two real no, there is infinitely many real nos ” எனக் குறிப்பிடப்படுகிறதோ, அது உணர்த்தும் பொருள் எப்படியோ கிட்டத்தட்ட
அப்படித் தான் இன்றைய நவீன மேற்கத்திய அறிவியல் விளக்கும் 92 அடிப்படைத் தனிமங்கள்
பட்டியலும் கூட.
நாம் பார்த்து நமது
வசதிக்கேற்ப எளிமையாக ஐந்தே ஐந்தாகவும் வகை பிரித்துக் கொள்ளலாம், 92 ஆகவும் வகை பிரித்துக் கொள்ளலாம், 920 ஆகவும் கூட
பிரித்துக் கொள்ளலாமோ என்னவோ? யார் கண்டது வருங்கால
விஞ்ஞானம் அத்தகைய நுண்பிரிவு முறைகளை கண்டுபிடிக்கக் கூடுமோ என்னவோ? அதாவது தனிமங்களின் படிநிலை வரிசையில் இன்னும் பல பிரிவுகளை
யுரேனியத்திற்கு அப்பால் அல்லாமல் ஒற்றைப் புரோட்டியமான ஹைட்ரஜனுக்கும் கீழே
அணுக்களின் அடிப்படைத் துகள்களில் மென்மேலும் பல பிரிவுகளை அதாவது இன்று கருது
கோள்கள் என்ற நிலையிலிருப்பவற்றில் பல நாளை அவை உண்மை தான் என உரிய திருத்தங்களுடன்
கண்டுபிடிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டாலும் படலாம். ஏன் எண்களில்
பத்தடிமான முறை மட்டும் தான் உள்ளதா? ஐந்தடிமான, இரணடடிமான முறைகள்
இல்லையா? இன்று கணினிகளில் பயன்படுத்தப்படும் பைனரி வரி
வடிவம் என்பது என்ன? இரண்டடிமான எண்முறை தானே? இரண்டு விநாடிகளுக்கு இடையே உள்ள காலத்தைக் கூட நாம் ஒரு
எல்லையே இன்றி பிரிக்க முடியும் தானே? between any two
real no, there is infinitely many real nos என்ற இந்த வாக்கியத்தின் பொருள்
ஒரு வகையில் இரண்டே இரண்டு விநாடித்துளிகளுக்கு இடையே உள்ளக் கால இடைவெளிக்குக்
கூடப் பொருந்தக் கூடியது தானே? கோட்பாட்டளவில் இரண்டே இரண்டு விநாடிக் கால
இடைவெளியில் கூட எல்லையற்ற கால இடைவெளிக்கான இருப்பு ஏற்கனவேயே உள்ள ஒன்று தான்.
இல்லை அதிலும் ஒரு புதிய சாதனையைப் படைக்கிறேன் பார் என இயற்கைக்குப் போட்டியாக மனிதனே கிளம்பினால் அதையும் இரு கை தட்டி வரவேற்க
வா மகனே வா என இயற்கையும் தயாராக உள்ளதோ என்னவோ? யாரேனும் அப்படி ஒரு தயார் ரெடிமேட் நிலையில் உள்ளீர்களா?
No comments:
Post a Comment